அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை - உயர்க்கல்வித்துறை அமைச்சர் - kalviseithi

Sep 4, 2020

அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை - உயர்க்கல்வித்துறை அமைச்சர்


அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கமளித்துள்ளார். தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சியடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில் தமிழக அரசு எடுத்துள்ள அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க இயலாது என்று தெரிவித்திருந்ததாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது. 


இருப்பினும் இதுகுறித்து இறுதி முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரியர்ஸ் மாணவர்களை ஆல்பாஸ் செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கழகம் எதிர்ப்பு என்ற வெளியான தகவல் தவறு. மாணவர்களை ஆல்பாஸ் செய்ய தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து எந்தவித மின்னஞ்சலும் வரவில்லை. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தனது கருத்தை அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் கருத்தாக கூறி வருகிறார், என தெரிவித்துள்ளார். மேலும், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அரசின் முடிவில் எவ்வித மாற்றமுமில்லை, எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி