அரியர் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்..!! - சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேச்சு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2020

அரியர் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்..!! - சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேச்சு!அரியர் மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதா நிறைவேறியது. இதனையடுத்து அரியர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இதற்கு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கமளித்துள்ளார். அதாவது, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கு விசாரணை முடிந்தபின் அறிவிக்கப்படும் தீர்ப்பின் படியே அரியர் மாணவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


தொடர்ந்து பேசிய அவர், யூ.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., வழிகாட்டுதகல்களின் படியே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். மேலும் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் தன்னுடைய பர்சனல் மெயில் ஐடி மூலமாக ஏ.ஐ.சி.டி.இ.-க்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இதனால் மாணவர்கள் இதுகுறித்து கவலையடைய வேண்டாம் எனவும், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வினை எழுதவே தயாராக இல்லை என்றுதான் அர்த்தம் என்ற ஒரு விளக்கத்தையும் சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த செய்தி அரியர் மாணவர்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. தொலைதூர கல்வி மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி