BE RANK LIST - பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் 17.09.2020க்கு பதில் 25.09.2020 அன்று வெளியிடப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சரின் செய்திக் குறிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2020

BE RANK LIST - பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் 17.09.2020க்கு பதில் 25.09.2020 அன்று வெளியிடப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சரின் செய்திக் குறிப்பு!



தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் , அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் , அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள் , அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விழையும் மாணாக்கர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து , பதிவு செய்த அனைத்து மாணாக்கர்களுக்கும் சமவாய்ப்பு எண் ( Random Number ) 26.08.2020 அன்று வழங்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து , கொரோனா நோய்த்தொற்று ( COVID - 19 ) சூழ்நிலையின் காரணமாக மாணாக்கர்களை நேரில் அழைக்காமல் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக திறம் பெற்ற பேராசிரியர்கள் , வருவாய்த் துறை அலுவலர்கள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் , முன்னாள் இராணுவத்தினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்புடன் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது . பெரும்பான்மையான மாணாக்கர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது . இன்னும் சில மாணாக்கர்கள் சரியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால் , மாணாக்கர்களின் நலன் கருதி 17.09.2020 அன்று வெளியிடப்பட வேண்டிய தரவரிசைப்பட்டியல் 25.09.2020 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது . மேலும் , மாணாக்கர்கள் www.tneaonline.org ETT இணையதளத்தில் தங்களின் account- ல் login செய்து தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம் . மாணாக்கர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-22351014 மற்றும் 044-22351015 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி