அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: 2-வது சுற்று கலந்தாய்வு நடத்த அரசு திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2020

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: 2-வது சுற்று கலந்தாய்வு நடத்த அரசு திட்டம்

 


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கலந்தாய்வில் நிரம்பாத இடங்களுக்கு மீண்டும் சேர்க்கை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

இதற்கிடையே நடப்பு ஆண்டு சேர்க்கைக்கு இணையவழியில் 27,721 பேர் விண்ணப்பித்தனர்.அதில் 16 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து கல்லூரிகள் அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து கடந்த மாதம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அதில் 8 ஆயிரம் இடங்களே நிரம்பியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இணையவழியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. கலந்தாய்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 8 ஆயிரம் இடங்களே நிரம்பியுள்ளன. இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு 2-வது சுற்று கலந்தாய்வு  நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்’’ என்றனர்.

2 comments:

  1. ST.XAVIER'S ACADEMY,
    NAGERCOIL, CELL:8012381919.
    TNEB Accountant- Online class
    STUDY MATERIALS AVAILABLE.
    1. Unit wise study material
    2. Concept wise explanation
    3. Multiple choice questions
    4. Answer with explanation
    5. Total 1046 pages

    ReplyDelete
  2. ஆசிரியர்களுக்கு வயது வரம்பு 40 ஆக குறைக்கப்படும் போது அரசியல்வாதிகளுக்கும் வயது வரம்பு 35 என நிர்ணயித்தால் என்ன தவறு. இளைஞர்கள் வாய்ப்பை கொடுத்துவிட்டு மிகவும் முதுமையை அடைந்தவர்கள் வெளியேற வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வாருங்கள் நாடானது உருவப்படம் மும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி