ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை! - kalviseithi

Oct 10, 2020

ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை! பள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான வயது வரம்பு குறைக்க பட்டு உள்ளது. இனி, 40வயதுக்கு மேலானவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது.

தமிழக பள்ளி கல்வி துறையில், நிர்வாக ரீதியாகபல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரியில், புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், வட்டார கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான வயது வரம்பு, 40 வயது என, முடிவு செய்யப்பட்டது. இந்த அரசாணையின் நகல், தற்போது அனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

 இந்த அரசாணையை பின்பற்றி மட்டுமே, இனி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என, கூறப்பட்டுள்ளது. இதுவரை, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதான, 58 வயது நிரம்பாத அனைவரும், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், 58 வயது வரை உள்ளவர்களுக்கு பணி வழங்குவதால், அவர்களிடம் இருந்து போதிய அளவில் பணியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சிலர் ஒரு மாதம், இரண்டு மாதம் மட்டும் அரசு பணியில் இருந்து விட்டு, பல வருடங்கள் பென்ஷன் பெறும் நிலை ஏற்பட்டது. அதனால், அரசுக்கும் தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதை தவிர்க்கவே, 40 வயதுக்கு மேல் நியமனம் இல்லை என, முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 எனவே, வருங்காலங்களில், வட்டார கல்வி அதிகாரி, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர் போன்ற பதவிகளுக்கு, 40 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட உள்ளனர்.

CLICK HERE TO DOWNLOAD GAZETTE88 comments:

 1. Replies
  1. ST.XAVIER'S ACADEMY,
   NAGERCOIL, CELL:8012381919.
   TNEB Accountant- Online class
   STUDY MATERIALS AVAILABLE.
   1. Unit wise study material
   2. Concept wise explanation
   3. Multiple choice questions
   4. Answer with explanation
   5. Total 1046 pages

   Delete
  2. பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

   ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு
   அநீதி : உடனடியாக நீக்க வேண்டும்!

   தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி
   40 வயதை கடந்தவர்களுக்கு இனி ஆசிரியர் பணி வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
   லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியர் பணி கனவை கலைக்கும் இந்த அறிவிப்பு மிகவும் அநீதியானது.

   தமிழக அரசின் இந்த ஆணையை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழ்நாடு உள்ளிட்ட
   நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத ஒரே பணி ஆசிரியர் பணி
   மட்டும் தான். ஒருவர் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது
   தான் கடந்த 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனை ஆகும். அதன்படி ஆசிரியர்
   பணிக்கு தகுதிபெற்ற ஒருவர் அவரது 57-ஆவது வயதில் கூட பணியில் சேர முடியும். தமிழ்நாட்டில்
   ஓய்வு பெறும் வயது 59-ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான
   வயது 58-ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக 40-ஆக குறைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.

   தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு தேவையான குறைந்தபட்சக் கல்வி பெற்றவர்கள் 7.12 லட்சம் பேர்
   ஆவர். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இடைநிலை
   ஆசிரியர் பணிக்கு 1,66,543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலை பட்டதாரி
   ஆசிரியர் பணிக்கு 2,31,501 பேர் என மொத்தம் 7,12,196 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர
   இன்னும் சில லட்சம் பேர் பதிவு செய்வதற்காக காத்திருக்கின்றனர். இவர்களில் சில லட்சம் பேர்
   ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர்.

   Delete
  3. இந்த அதிமுக அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் பணி நியமனத் தடைச் சட்டம் இயற்றி 5 வருடத்தைக் கடத்துவார்கள். வாழ்வில் படித்தவர்களுக்கு 5 வருடங்கள் இவர்களால் வீணாகிவிடும் ஒவ்வொருமுறையும். தற்போது பத்தாண்டுகளாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு பணி நியமனத் தடைச்சட்டம் கொண்டுவராமல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்தார்கள். இப்படி குறைக்கும் போது ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெரும்பாலும் உயர்த்தும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வயதும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது வயதை 40 என்று நியமிக்கும் போது 30 வயதில் இவர்களின் ஆட்சி ஆரம்பம். தற்போது பத்தாண்டு கடந்து 40 வயது ஆனதும் இவர்களின் ஆட்சியில் தான். 7 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அப்படியே பணியிடங்கள் அறிவித்தாலும் அவற்றில் குளறுபடி செய்து வழக்குப் பதியச் செய்து அந்த பணியினை நிறுத்தி வைத்துவிடுவார்கள். எங்கும் தொகுப்பூதியம் என்று கொண்டுவந்து கொத்தடிமைகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். படித்தவர்கள் சிந்தித்து உணரவேண்டும்.

   Delete
 2. இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.MLA MP வயது நிர்ணயம் செய்யுங்க... இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.நீங்க பதவி ஆசையில் உங்களுக்கு சாதகமாக சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைபீர்கள்... நீதிமன்றத்திற்கு சென்றால் அரசின் கொள்கை முடிவுனு சொல்லுவீங்க...என்ன அரசாங்கம் இது... மக்களுக்கான மக்களாட்சியா நடக்குது? அரசியல்வாதிகளுக்கான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது...தமிழ் மொழியே தெரியாதவன் வேலைவாய்ப்புகான தேர்வில் தமிழில் 25க்கு24 மதிப்பெண் பெறுகிறான்... என்ன நடக்குது நாட்டில் இதற்கான தீர்வு தேர்தல் மட்டுமே... இந்த ஊழல் அரசை வீட்டுக்கு வழி அனுப்பினால் மட்டுமே முடியும்...ப.ஜ.க.வின் அடிமைகள் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.....

  ReplyDelete
  Replies
  1. This government order is not right one because knowledge has no age limit... the above 40 age tet passed person have more experience and knowledge in an teacher feald we need only knowledge not age...I think this government have no knowledge...

   Delete
  2. திடீரென சட்டம் ஏற்றுதல், திடீரென அதனை ரத்து செய்தல், தமிழ் நாட்டில் தமிழருக்கு வேலையில்லை.. இன்னும் பல... எங்கும் ஊழல், எதிலும் ஊழல்! சுதந்திர இந்தியா என்று சொல்கிறோம் ஆனால் உண்மையில் நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட ஊழல் அரசியல்வாதிகள் ஒழிந்தால் தான் நமக்கு சுதந்திரம்..

   Delete
  3. உங்கள் கருத்து 100% உண்மை நன்று

   Delete
 3. 40 i kadantha nangal enna seivathu tet pass panniyum prayojanam illai

  ReplyDelete
 4. Many

  trained trs crossed 40 and above

  ReplyDelete
 5. Could u have dare fix the age to politicians, stupid rules

  ReplyDelete
 6. I think uneducated citizens determining the rules, educated citizens need to follow

  ReplyDelete
 7. OC category age limited 40 other catgory 45 age limited refer page no 15.

  ReplyDelete
 8. OC category age limited 40 other catgory 45 age limited refer page no 15.

  ReplyDelete
  Replies
  1. இது தெரியும்...நீங்க இந்த மங்குனி ஆட்சியாளர்கள் செய்தது சரினு சொல்ரிங்களா?

   Delete
  2. இது தெரியும்...நீங்க இந்த மங்குனி ஆட்சியாளர்கள் செய்தது சரினு சொல்ரிங்களா?

   Delete
 9. நாங்கள் படித்து முடிக்கும் போதே வயது 25 தூண்டுகிறது. அரசு வேலையும் பணம் உள்ளவனுக்குக் கிடைக்கிறது. உங்களை போன்ற கோமாளிகள் எங்களுக்கு ஆணையிடும் அளவில் நாங்கள் உள்ளதை எண்ணி வருந்துகிறோம். 58 வயது உள்ளவர்களை வேலை வாங்க சிரமம் உள்ளதென்றால். பிறகு ஓய்வு பெறும் வயதை ஏன் 59 ஆக உயர்த்த வேண்டும்?
  ஓய்வூதியம் பலன் கொடுக்க பணம் இருக்காது, ஆனால் ச. ம. உ களுக்கு பணம் இருக்கும். ஓய்வு வயதை 55 ஆக குறைத்து, இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றப் பாருங்கள்...

  ReplyDelete
 10. Part time teachers sagadha venum

  ReplyDelete
 11. இவ்ளோ நாளா தலையில் மண்ணை போட்டேள்.. இப்போ வாயிலயே போட்டுட்டேளே...

  ReplyDelete
 12. Loosu madhiri daily um oru news solranunga. Election pakkam varudhu. Avanungalukku sariyana padam pugattuvom. DMK vai vetri pera seivom.

  ReplyDelete
 13. pH ortho candidate ku age limit?

  ReplyDelete
 14. Govt. மாறினால் இந்த G.O வை மாற்ற வாய்ப்பு உள்ளதா?. இந்த ஆட்சியினை மாற்றி காட்டுவோம்

  ReplyDelete
 15. 40 வயது கடந்தவர்கள் ADMK வுக்கு வாக்களிக்க தகுதி அற்றவர்கள் என்று அறிவித்தால் வரவேற்கிறோம்

  ReplyDelete
 16. இந்த அரசாணை முதுகலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது

  ReplyDelete
  Replies
  1. It is applicable to PG applicant also. Please refer page from 22 to 30.PG applicant upper age limit 40 .

   Delete
  2. 40 வயதை கடந்தவர்கள் PG TRBக்கு படிக்கவேண்டாம்

   Delete
 17. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
  செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
  தேர்ச்சி பெற்ற 40 வயது ஆகாத ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  ReplyDelete
 18. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
  செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  ReplyDelete
 19. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
  செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  ReplyDelete
 20. Ennum yeththana naal erukku ungaluku revit vaikkum pothu therium...

  ReplyDelete
 21. TNTET notification la 57 age varai exam eluthalam.buy ippa job 40_45age limit.This matter niriya kulappam varum.

  ReplyDelete
 22. Uppu pori kooda vanga mudiyathu

  ReplyDelete
 23. TNTET 2017&19 eligible candidate certificate validity 7yeary only na 40,45 age ullunga nillamai.Certificate vulued but age illai,enna kodumai sir edhu,so kulappama adigam

  ReplyDelete
 24. பென்ஷன் கிடையாது

  ReplyDelete
 25. மாண்புமிகு முதல்வர் எம்எல்ஏ மற்றும் எம்பி ஆக நிற்க 40 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற தைரியம் உள்ளதா? ஆசிரியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் ஆசிரியர் பணிக்கு போலவே எல்லா அரசுபணிக்கும் வயது 40 ஆக குறைக்க தைரியம் உள்ளதா அரசுக்கு? பின் எதற்காக போட்டி தேர்வு 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் பணம் பெற்று வேலை அளிக்க தயாராகிவிட்டது இந்த அரசு. சுயமுடிவு எடுக்க தெரியாத அரசு. ஆட்சி செய்ய தகுதி இல்லாத அரசு நடக்கட்டும் தேர்தல் செலவுக்கான வழி இது

  ReplyDelete
 26. 40 age akituchna TET padichsvanga kollai adikavum thirudavum polam govt arasanai viraivil don't feel friends

  ReplyDelete
 27. There is no Pension scheme now in the education as well as state government employees. Then why you mentioned here for irresponsible explanation.. Stupid news paper..

  If is this correct, why you increased the retirement age. Unstable decisions from idiotic government

  Muttaal koottam..

  ReplyDelete
 28. Ithu entha vithathil nyayam...40 vayathirku merpata evalavo yezhaigal padithivitu tet thervilum therchi petru govt velai kedaikum endra nambikayil ullanar ....avargalin vazhvatharam enagum athai nambi irukum kudumbagal enagum...

  ReplyDelete
 29. asiriyar kalvi padithavarkalai vazhippari..Kolai ...kollai ..thiruttu pondra thavarana pathaikku vazhi vakukkum

  ReplyDelete
 30. The rule has to be cancelled immediately

  ReplyDelete
 31. Kastapattu exam eluthi pass pannunna ippo 40age- la velai illaiam. Equal any gov job thanga.

  ReplyDelete
 32. 2021 election la indha muttal koottam kanamal poyi viduvargal.yarume idha ninachu kavalai pada vendam.thiru Stalin idhai cancel panniduvar.plz.yarum feel pannadheenga.

  ReplyDelete
 33. It's unfair,please reconsider it.otherwise we loss good experienced teachers and ruin the life.😢

  ReplyDelete
 34. இந்திய இரணுவப் பள்ளி ஆசிரியர் நியமனம் வயது 57

  ReplyDelete
 35. Tamil nadu chief minister m.k.stalin vaazhga

  ReplyDelete
 36. Real chief minister from now m.k.stalin only .. from now .. tamil nadu cm stalin

  ReplyDelete
 37. Start our campaign to get win all 234 tn assembly to DMK .... Admk deposit kaali pananum..

  ReplyDelete
 38. அதிமுக அரசு விரைவிலேயே முடிவுக்கு வரும். ஆட்சி மாற்றம் வந்ததும் அடிமைகள் இயற்றிய அரசானைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். **ஸ்டாலின்

  ReplyDelete
 39. அதிமுக அரசு விரைவிலேயே முடிவுக்கு வரும். ஆட்சி மாற்றம் வந்ததும் அடிமைகள் இயற்றிய அரசானைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். **ஸ்டாலின்

  ReplyDelete
  Replies
  1. Manasatchi illada arasu.Panam vangi non interview posts kodukanga,Appo employment seniority ethuku,employment ethuku summa

   Delete
 40. Change this order or we make a struggle to against government

  ReplyDelete
 41. இப்பதான் பென்ஷன் கிடையாதே

  ReplyDelete
 42. Oc-40 age,Bc, MBc,sc,st -45 age

  ReplyDelete
 43. ஆசிரியர்பணி 40வயசுக்குமேல் சும்மாவொன்றும் தரவில்லை tet,trb பாஸ்பண்ணிதான் தாராங்க இதுல வயது என்ன செஞ்சுச்சு

  ReplyDelete
 44. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB (TAMIL) & DIET LECTURER (TAMIL)
  NEAR BDO OFFICE DHARMAPURI AND
  NEAR GOVT ARTS COLLEGE,KRISHNAGIRI.
  CONTACT : 9344035171,8524827150,9842138560

  ReplyDelete
 45. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB (TAMIL) & DIET LECTURER (TAMIL) ONLY
  NEAR BDO OFFICE DHARMAPURI AND
  NEAR GOVT ARTS COLLEGE,KRISHNAGIRI.
  CONTACT : 9344035171,8524827150,9842138560
  CLASSES WILL START SOON...

  ReplyDelete
 46. இந்த சட்டம் போட்டதுக்கு பதில் தழிழ்நாட்டில் யார் எல்லாம் வாத்தியாருக்கு படித்துவிட்டு இருக்காங்க அவங்க எல்லாருக்கும் குடும்பம் உட்பட இந்த அரசாங்கம் மரண தண்டனை கொடுக்கிறது என மாற்றி எழுதவும் என் வயிறு எரிந்து சொல்கிறேன் நீங்க எல்லாம் நல்லாவே இருக்கமாட்டிங்க

  ReplyDelete
 47. அனைத்து மதம் இது பெருந்தம் சரி

  ReplyDelete
 48. Definitely this rule will be totally changed very soon. Believe our God.

  ReplyDelete
 49. ஆசிரிய சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி.
  அனுபவம் மிக்க ஆசிரியர்களை இழந்து கல்வியில் என்ன முன்னேற்றத்தை அடைய முடியும்?

  ReplyDelete
 50. Government school teachers age 40 pothum.reteriment age government job 40 solluga. Tet passed many candidate job ketaikum.2013 to 2019 vari, IAM tntet passed candidate 2013

  ReplyDelete
 51. Government school teachers age 40 pothum.reteriment age government job 40 solluga. Tet passed many candidate job ketaikum.2013 to 2019 vari, IAM tntet passed candidate 2013

  ReplyDelete
 52. ithukku pathil englai Sava sollidalam endravathu en apppavirku job kidaikum endra nambikkaile irunthanar ipa athuvum pocha 5 lake kati DTE bed degree tet padichathelam vaste oru pottikadai vaithirunthal kooda polachi irukkalam

  ReplyDelete
 53. Sir கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் னு இது வரை posting போடுங்கனு யாரும் கேக்கல 13 17 19 ன்னு பிரிஞ்சு தான் இருக்கோம் tet pass செய்தவர்கள் எல்லாரும் சேர்ந்து பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வேண்டும்என்று போராடி இருந்தால் இன்று 2013 ல33 வயதிலேயே tet pass செய்தவர்கள் இன்று 40 வயதில் வேதனை பட தேவை இல்லை இனியும் எழுத்து மூலம் வேதனை பட்டுக்கொண்டிருந்தால் எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான் நீடிக்கும். இனியாவது ஒன்று சேர்வோம்

  ReplyDelete
 54. Above 40 years need not vote for rulling government because they will need only below 40 old person votes only

  ReplyDelete
 55. Teacher start political party Start our campaign to get win all 234 tn assembly to DMK .... Admk deposit kaali pananum..

  ReplyDelete
 56. 40 வயதுக்கு மேல் election LA nikka koodathunu oru sattam pottuttu yengaluku age limit 35 nu kooda korachikonga sir.....

  ReplyDelete
 57. வருகின்ற இடைத்தேர்தலில் 40 வயது தாண்டிய எவனும் தேர்தலில் நிற்பதற்கு அனுமதியில்லை என்று அனைத்து ஆசிரியர் தோழர்களும் கோரிக்கை வைத்தால் நல்லது. என்னடா கொடுமையாக இருக்கு ஓரு MLA இருப்பவருக்கு கல்வி தகுதியே அவசியமில்லை. ஆனால் லட்சக்கணக்க பணம் செலவழித்து ஆசிரியர் பணிக்கு படித்தால் 40 வயதிற்கு மேல் வேலை இல்லை. இறைவா நீயே பதில் சொல்....

  ReplyDelete
 58. இந்த ஊழல் ஆட்சி நடத்தும் அதிமுக திருடன்களுக்கு யாரும் ஓட்டு போட வேண்டாம். எனக்கு 41 வயது இனி ஆசிரியர் வேலை இல்லை.உங்கள் அனைவருக்கும் 40 வயது முடியும் முன் வேலை இவனகள் தர போவதும் இல்லை சிந்திப்பீர் செயல்படுவீர்....

  ReplyDelete
 59. நமது ஆயுதம் நமது ஓட்டு மாத்தி குத்தினால் மந்திரி எந்திரிடா...

  ReplyDelete
 60. அரசு உடனடியாக உத்தரவு திரும்பி பெற்றால் நன்று இல்லை என்றால் நிச்சயம் ஆசிரியர் எதிர்காலம் மிகவும் கஷ்டம்

  ReplyDelete
 61. அப்போ எதற்காக சான்றிதழின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது? இது தவறான தகவல்

  ReplyDelete
 62. In this case, the English language Sava sollidalam endravathu en apppavirku job kidaikum endra nambikkaile irunthanar ipa athuvum pocha Microsoft Toolkit

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி