உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரங்கள் தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல் - kalviseithi

Oct 10, 2020

உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரங்கள் தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் விவரங் களை அக் .29 - ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தொடக் கக் கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார் . இது தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் சி.பழனி சாமி , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம் : 


கரோனா பரவல் காரணமாக நிகழ் கல்வியாண்டில் மட்டும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த செப் .30 - ஆம் தேதி நில வரப்படி மாணவர்கள் வருகையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் . அதன் முடிவில் ஆசிரியர் இல்லாத உபரி காலிப் பணியிடங் களை இயக்குநரகத்தில் சரண் செய்ய வேண்டும் . மேலும் , உபரி யாக உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அக் .29 - ஆம் தேதிக் குள் அனுப்ப வேண்டும் . இதுதவிர ' எமிஸ் ' தளத்தில் பதிவேற் றப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களைச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் . ஏனெனில் , அந்த எண்ணிக்கை அடிப்படை யில்தான் அரசின் இலவச நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் . அதேநேரம் ஆய்வின்போது போலியான மாணவர்கள் எண் ணிக்கை இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு அந்த பள்ளித் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் . மேலும் , பணியாளர் நிர்ணயம் செய்வதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.2 comments:

 1. ST.XAVIER'S ACADEMY,
  NAGERCOIL, CELL:8012381919.
  TNEB Accountant- Online class
  STUDY MATERIALS AVAILABLE.
  1. Unit wise study material
  2. Concept wise explanation
  3. Multiple choice questions
  4. Answer with explanation
  5. Total 1046 pages

  ReplyDelete
 2. இந்த அதிமுக அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் பணி நியமனத் தடைச் சட்டம் இயற்றி 5 வருடத்தைக் கடத்துவார்கள். வாழ்வில் படித்தவர்களுக்கு 5 வருடங்கள் இவர்களால் வீணாகிவிடும் ஒவ்வொருமுறையும். தற்போது பத்தாண்டுகளாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு பணி நியமனத் தடைச்சட்டம் கொண்டுவராமல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்தார்கள். இப்படி குறைக்கும் போது ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெரும்பாலும் உயர்த்தும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வயதும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது வயதை 40 என்று நியமிக்கும் போது 30 வயதில் இவர்களின் ஆட்சி ஆரம்பம். தற்போது பத்தாண்டு கடந்து 40 வயது ஆனதும் இவர்களின் ஆட்சியில் தான். 7 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அப்படியே பணியிடங்கள் அறிவித்தாலும் அவற்றில் குளறுபடி செய்து வழக்குப் பதியச் செய்து அந்த பணியினை நிறுத்தி வைத்துவிடுவார்கள். எங்கும் தொகுப்பூதியம் என்று கொண்டுவந்து கொத்தடிமைகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். படித்தவர்கள் சிந்தித்து உணரவேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி