ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 - வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - kalviseithi

Oct 14, 2020

ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 - வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் விடுத்துள்ள அறிக்கை :1.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்குபெற்று பணியிடை நீக்கம், 17-b குறிப்பானைகளை உடனடியாக நீக்கி அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை வழங்கிட வேண்டுகிறோம்.


2.2016 தமிழக சட்டம் சட்டமன்ற தேர்தலின் போது அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்,நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறிய வாக்குறுதியை 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம்


3. பள்ளிக் கல்வித் துறையில் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக ஒளிவு மறைவு இன்றி நடத்திட வேண்டுகிறோம்


4.ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க தமிழக அரசு கருவூலங்களுக்கு உத்தரவிட வேண்டும்


5. ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 - வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.இந்த அரசாணையால் ஆசிரியப் பணிக்கு படித்து முடித்து,தகுதிபெற்று காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியப்பணியின் கனவை சிதைக்கும் வகையில் உள்ளது.இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.


இவண்


 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

32 comments:

 1. இவர்கள் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

   Delete
  2. You are absolutely correct.

   Delete
 2. இது என்ன நியாயம்

  ReplyDelete
 3. இது என்ன நியாயம்

  ReplyDelete
 4. ஆசிரியர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. இந்த ஆணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

  ReplyDelete
 5. ஆசிரியர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. இந்த ஆணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

  ReplyDelete
 6. நாங்கள் பி.எட் படித்து முடித்தவுடன் எங்களுக்கு பணிவழங்கியிருக்கலாம்
  அல்லது.
  டெட் பாஸ் (2013)செய்தவுடன் பணிவழங்கியிருக்கலாம்.
  ஏழு வருடங்களாக நாட்களை கடத்திவிட்டு இப்பொழுது வயதைக் காரணம் சொல்லி வாழ்க்கையை வீணடிக்கிறீங்களே இது நியமா???

  ReplyDelete
 7. அதிமுக தலையெழுத்து மாத்திரை மேல் அடக்க வேண்டும் இவர்களும் மங்குனி அரசர்கள் இவர்கள் tk8 என்ன நடக்கப் போகுது

  ReplyDelete
 8. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

  ReplyDelete
 9. எப்பொழுதுமே இந்த ஆளும் அரசு பணக்காரர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படும்.இந்த மங்குனிகள் ஆளும் வரை இப்படிதான் இருக்கும் தேர்தலில் நாம் இவர்களை ஒழித்து வீட்டுக்கு அனுப்புவோம்.

  ReplyDelete
 10. 40 i kadanthavargaluku asiriyar pani valangavendum

  ReplyDelete
 11. District Employment Seniority padi posting poda vendum(2011-2019).2021 Election sun rises wins, ellarukum govt velai kidaikum.

  ReplyDelete
 12. உன்னா விரத போராட்டம் நடத்தினால் நல்ல முடிவு கிடைக்கும்!!!

  ReplyDelete
 13. என் பிள்ளைகளை 10 வரை படிக்க வைத்து ஏதோ தொழில் செய்ய சொல்ல போறேன் நான் படித்தது போதும் நாட்டில் படித்தவன் தான் கஸ்ட்ட படுகிறான்.

  ReplyDelete
 14. 40 age b.ed teachers Private school erundu nadu street kondu vanduthanga bed padisavannkala edu neediya

  ReplyDelete
 15. Part time teachers ku help panuga pls

  ReplyDelete
 16. 40 vayasukkulla irukkuravangalukku
  Maddum job kuduthudangalaa
  Waste news edhachcha oru kadhai
  Sollikitte irukkiringa

  ReplyDelete
 17. அரசியல்வாதிகளுக்கும் 40 வயது நிர்ணயம் செய்யலாம்

  ReplyDelete
 18. ஏன்டா இத முதல்லே சொல்லியிருந்தா Bed படிக்க பயன்படுத்திய பணத்தை வேற எதாவது தொழில் செய்து பொழப்பு நடத்திக் கிட்டு இருந்திருப்போம்.வேலை கிடைக்கும் நம்பி 20 வருடமா தனியார் பள்ளியில் சொற்ப‌ஊதியத்தில வேலை செய்து .டெட் தேர்விலும் தேர்ச்சி பெற்று.40 வயதும் கடந்து வாழ்க்கை கேள்வி குறியா ஆக்கிட்டங்களாடா? ஏன் வேலை இல்லாதவனையே கஷ்ட படுத்திறிங்க.

  ReplyDelete
 19. TET, PG TRB இந்த ஆண்டு அறிவித்தால் மட்டும் இந்த அரசு 15 இலட்சம் ஓட்டு ெற முடியும் அதனால் விரைவில் தேர்வுக்கான அனுப்பு வரும்

  ReplyDelete
 20. இவனுகளுக்கு இந்த ஆண்டுக்குள்ள முடிவு கட்டணும், வரும் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்க கூடாது

  ReplyDelete
 21. If trb call means their they have to add employment seniority marks then teaching experience marks

  ReplyDelete
 22. Last trb exam they didn't added that marks

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி