ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு. - kalviseithi

Oct 14, 2020

ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு.

 


உலகில் ஒவ்வொரு நாளும் அறிவியலிலும் , தொழில் நுட்பத்திலும் மற்ற துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியும் பெருகிக்கொண்டே வருகின்றன . ஆசிரியர்கள் தற்போதைய மாற்றங்களை அறிந்துக் கொண்டு தங்களது கற்பிக்கும் திறனையும் , தொழில் நுட்ப அறிவையும் அவ்வப்போது பெருக்கிக் கொள்வதும் , கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளுதலும் இன்றியமையாததாகும் . எனவே ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவைப் புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது . 

2019-20 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசு பள்ளி Ariunite 6. & NISHTHA- National Initiative for School Heads and Teachers ' Holistic Advancement என்ற ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்பட்டது . அப்பயிற்சி வெற்றி பெற்றதன் தொடர்ச்சியாக இக்கல்வியாண்டில் இணைய வழியாக ( Online ) கட்டணமில்லா NISHTHA பாடநெறிகள் ( courses ) பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் பள்ளி , Matric மற்றும் Nursery & Primary பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது . கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற NISHTHA பயிற்சியில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள கருத்துக்களில் தற்பொழுது இணைய வழியில் வழங்கும் விதமாக பல்வேறு மாற்றங்களை NCERT மேற்கொண்டுள்ளது . இதில் பல்வேறு செயல்பாடுகள் , காணொலிகள் , வினாடி வினா ( Quiz ) இணைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் அடிப்படையில் 18 பாடநெறிகள் ( courses ) வடிவமைக்கப்பட்டுள்ளன . இதில் புதிதாக COVID 19 நிகழ் சூழ்நிலையினை பள்ளி கல்வியில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பற்றி ஒரு பாடநெறி இணைக்கப்பட்டுள்ளது . 


இக்கல்வியாண்டில் இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது . எனவே கடந்த கல்வியாண்டில் பயிற்சி மேற்கொண்ட 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இக்கட்டணமில்லா இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) தங்கள் பணி மேம்பாட்டிற்காக பங்கேற்கலாம் . மேலும் கடந்த கல்வியாண்டில் பயிற்சி மேற்கொள்ளாத 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயமாக இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) கலந்துகொள்ள வேண்டும் . Digital Infrastructure for Knowledge Sharing ( DIKSHA ) இணைய தளத்தில் இடம்பெற்றுள்ள பாடம் சார் வளங்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் DIKSHA portal மற்றும் Mobile App வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது . எனவே NISHTHA பாடநெறிகள் ( Online courses ) , DIKSHA வழியாக அளிக்கப்படவுள்ளது .


 NISHTHA பாடநெறிகள் அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது . 15 நாள்களுக்கு 3 courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் 2021 சனவரி 15 வரை மூன்று மாதத்திற்கு பின்வருமாறு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக்கான கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.


Nishtha Training Schedule - Download here...1 comment:

 1. DIKSHA NISHTHA COURSE FULL DETAILS IN TAMIL
  Diksha ல் Nishtha என்ற ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வகுப்பில் எப்படி நுழைவது என்றும்,
  எப்படி பாடம் கற்பது என்றும்,
  தேர்வு எப்படி எழுதுவது என்றும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

  This video clearly says that,
  How to join the Nishtha course in Diksha app.
  How can i attend the online class.
  How do write the online Nishtha Exam.

  https://youtu.be/4gl0Q2GjYaw

  Thz

  P. ARMSTRONG VIMAL RAJIV,
  armssoft.weebly.com
  M.P.M. SWAMY MIDDLE SCHOOL, ALAGANERI, KURUVIKULAM ,
  SANKARANKOVIL, TENKASI

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி