8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2020

8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

 


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் முட்டி வரை சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு காரணம் மொத்தமாக அடர்த்தியாக பெய்த கனமழை தான் என்று தெரிவிக்கப்படுகிறது. 


நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புகார் எண் அறிவிப்பு: 


சென்னையில் தண்ணீர் தேங்கினால் பொதுமக்கள் 1913 எண்ணில் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்., சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கிய மழை நீர் 2 மணி நேரத்தில் அகற்றப்பட்டது. வடிகால்கள் புதிதாக கட்டப்பட்டும், தூர்ந்து போனவை புதுப்பிக்கப்பட்டதால் மழைநீர் வடிய வழிவகை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையில் 3 முதல் 10 இடங்களில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துக் குழுக்கள், பொது சமையல் அறை, அம்மா உணவகங்கள் தயாராக உள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி