8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2020 - kalviseithi

Oct 15, 2020

8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2020

 


நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவப் பள்ளிகளில் காலியாக 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறனும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுக்கான இந்த வாய்ப்பை மிஸ்பண்ணிடாமல் பயன்படுத்தி பயன்பெறவும். 


பணி: Post Graduate Teacher (PGT), Trained Graduate Teachers (TGT), Primary Teacher (PRT)


காலியிடங்கள்:  8000


தகுதி: PGT பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். TGT, PRT பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.  


மேலும் மேற்கண்ட தகுதியுடன் CET, TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CET, TET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


வயதுவரம்பு: 5 ஆண்டுக்கும் குறைவான பணி அனுபவம் உள்ளவர்கள் 40க்குள்ளும்,  5 ஆண்டுக்கும் மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


தேர்வானது நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வரும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும். 


தேர்வுக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 


விண்ணப்பிக்கும் முறை:  www.aps-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


எழுத்துத் தேர்விற்கான அனுமதிசீட்டு 04.11.2020 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்


தேர்வு முடிவுகள் 02.12.2020 அன்று வெளியிடப்படும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2020


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aps-csb.in என்ற இணையதளத்தில் அல்லது http://aps-csb.in/Candidate/GeneralInstructions.aspx என்ற லிங்கில் சென்று பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி