NISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2020

NISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்!

NISHTHA ( National Initiative for School Heads and Teachers Holistic Advancement ) பயிற்சி வழிகாட்டுதல்கள் :


> 1 முதல் 8 ம் வகுப்பு எடுக்கும் அனைத்துவகை பள்ளி ஆசிரியர்களும் ( அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / நர்சரி & பிரைமரி ) DIET விரிவுரையாளர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பயிற்சியில் பங்கு பெறுதல் வேண்டும். 


> பயிற்சியில் மொத்தம் 18 பாடநெறிகள் ( Course ) உள்ளன . 15 நாட்களுக்கு 3 பாடநெறிகள் என்ற அடிப்படையில் அக்டோபர் - 16-2020 முதல் ஜனவரி 15-2021 வரை நடைபெறும் . - தமிழ் மற்றும் ஆங்கில வழியில் உள்ளன . 


> EMIS இணையதளத்தில் TNDIKSHA வை click செய்து அல்லது DIKSHA App பதிவிறக்கம் செய்து பயிற்சியில் பங்கு பெறலாம் . 

( Enter Basic Details , Mobile No.- OTP ) Login - > Username - > Password - teacherID 

 Password பெற EMIS இணையதளத்தில் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும். 

School Login - > staff Detail - > Staff Login Detail - > TeacherID - > Password 


> கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரிசையில் ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கு பெறுதல் வேண்டும் . பாடநெறியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் ஆசிரியர்கள் நிறைவு செய்தல் வேண்டும்.


Demonstration - > Transcript - > Activity 


> பாடநெறியில் ஏதெனும் சந்தேகம் இருப்பின் Telegram குழுவில் உள்ள Resource Person- னிடம் தெளிவு பெற்று கொள்ளலாம். 


> பாடப்பொருளை ஆசிரியர்கள் குறிப்பு எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.


> சுயநிதி பள்ளிகள் 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் பங்குபெறுவதை மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.


> பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் Telegram app download செய்தல் வேண்டும்.


> பயிற்சி தொடர்பான தகவல்கள் Telegram app ல் அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


>  அனைத்து பாட நெறிகளும் ( 18 course ) நிறைவு செய்தவுடன் ஜனவரி 2021 மாதத்தில் Complementary Based Assessment தேர்வில் 60 % மேல் எடுப்பவர்களுக்கு Certificate of Merit Online- ல் வழங்கப்படும்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி