அதிர்ச்சி - நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றச்சாட்டு . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2020

அதிர்ச்சி - நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றச்சாட்டு .

 

நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றச்சாட்டு .

அரியலூர்: நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றம் சாடியுள்ளார். தேர்வில் 680 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்த நிலையில் 37 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். நீட் தேர்வில் பயன்படுத்திய அசல் ஓஎம்ஆர் சீட் வேண்டும் என்று மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கான தன்னுடைய 2 வருட உழைப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளதாக மாணவி வருத்தம் தெரிவித்துள்ளார். 

7 comments:

  1. உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும்.

    ReplyDelete
    Replies
    1. அதை விட மக்கள் மன்றமே சிறப்பு

      Delete
  2. Mr admin fake news போடாதீங்க, tet 3500posting fake news தான், உண்மை தன்மை அறிந்து செய்தி போடுங்க, போலியான செய்தி போட்டு உங்க rate ஏத்தாதிங்க

    ReplyDelete
  3. Tet தேர்வில் 90 மதிப்பெண் எடுத்து பாதிக்கப்பட்டவாருக்கு அரசு பணி, பரிசீலனை இது fake news, செய்தியின் உண்மை தன்மை அறிந்து post பண்ணுங்க admin

    ReplyDelete
  4. இந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்.

    ReplyDelete
  5. நீட் ஒழிக! தி.மு.க வாழ்க! ஆக வாழப்பாடி இராமசாமி பதவி விலகுக

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி