இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2020

இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 


பள்ளிக் கல்வி - இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் (Special Incentive) - 2020-21 ஆம் கல்வியாண்டில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்.


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ / மாணவிகள் எக்காரணம் கொண்டும் தங்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட ஊக்கம் அளிக்கும் வகையில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 2011 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மேற்கண்ட திட்டத்தை 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் எண்ணிக்கை விவரங்களை இனவாரியாக ( சுயநிதி பாடப் பிரிவு நீங்கலாக ) இணைப்பில் கண்டுள்ள மூன்று படிவங்களில் பூர்த்தி செய்து ksec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.10.2020 க்குள் அனுப்பிவிட்டு , முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலினை இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 DSE Director Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி