தமிழகத்தில் "பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - kalviseithi

Oct 19, 2020

தமிழகத்தில் "பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அரசு நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்துகொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. 


அதன் அடிப்படையில் சில மாநிலங்களில் அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனினும் தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவம்பர் 11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.


இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ்  பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்றும்,  பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

19 comments:

 1. சார் தயவு செய்து இனிமேல் இந்த செய்தி போட வேண்டாம் ஓரே செய்தியை எத்தனை முறை தான் போடுவீர்கள் கடந்த 3மாதமாக ஒரே செய்தி.

  ReplyDelete
 2. Ethukku thaan ethanai alosanai koottam and katuthu ketpu

  ReplyDelete
 3. School reopen padhi pesi time waste panadhinga. Trb polytechnic fake list eppo ayya vida poringa corona reason sollidhinga solli 8 month agudhu.

  ReplyDelete
 4. Anaithu thurai athigarigalum alaithu meeting pottu appuram news kodukka vendiyathu thane.

  ReplyDelete
 5. Eppa than school reopen panuvanga

  ReplyDelete
 6. அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு பள்ளிகளை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
  Tasmac ஆல் பரவாத நோயா....பள்ளி திறப்பால் பரவப் போகிறது...அன்றாடம் தொழில் செய்வோரும் அதே அச்சத்தோடு தானே பாடுபடுகிறார்கள்....
  பள்ளிகளை திறந்து ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்குமா இந்த மெத்தன அரசு....

  மனவலியோடு
  அரசுப் பள்ளி ஆசிரியர்

  ReplyDelete
 7. அமைச்சருக்கே தெரியாம ரிசல்ட் வரும் போது.. பள்ளி திறப்பு அவருக்கு தெரிய
  தெரிய வாய்ப்பில்லை..பள்ளிகள் திறந்தவுடன் தான் அவருக்கு தெரிய வரும் .இதை எல்லாம் பெரிதாக எடுத்துக்குனு..விடுங்கப்பா..

  ReplyDelete
 8. மாணவர்களின் எதிர்காலம் மங்கிக்கொண்டு இருக்கிறது.எல்லா துறையும் செயல்பட தொடங்கிவிட்டது.பள்ளிக்கு மட்டும் ஏன் இவ்வளவு குழப்பம்? மேல்நிலை வகுப்புகள் தொடங்க தாமதமானல் படிப்பில் ஆர்வமற்ற சமுதாயம் உருவாகும்...உருவாகிவிட்டது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 10,11,12 தொடங்க முயற்சி செய்யுங்கள். அக்கறை கொண்ட அரசு என்று கூறி வருங்கால சமுதாயத்தை சீரழித்து விடாதீர்கள்.குறிப்பு: மேல்நிலை மாணவர்கள் பலர் கிடைத்த வேலைக்கு செல்கின்றனர்.அங்கு ஆபத்து இல்லையா? காலக்கொடுமை.

  ReplyDelete
  Replies
  1. Uyir ku aabathu vantha neenga kodupingala sir?

   Delete
 9. முதலில் இலவச ரேசன் அரிசியை நிறுத்துங்கள்.. வயிறு காய்ஞ்சா அவனவன் வேலைக்கு ஓடிருவானுங்க.

  ReplyDelete
 10. Please open the school as early as possible because children's are mentally stressed last pasted eight months those are want to enjoying his/her school life funfully
  +12 children are the this year only enjoy school life
  They missing schools life

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி