உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் - பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2020

உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் - பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை!

உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் : 


1 ) அரசாணை ( நிலை ) எண் 37 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR.IV ) துறை , வெளியிடப்பட்ட நாளான 10.03.2020 - க்கு முன்னர் ( அதாவது 09.03.2020 வரை ) உயர்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 


2 ) அரசாணை ( நிலை ) எண் .328 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( பணியாளர் . A ) துறை , நாள் : 09.04.1983 , அரசுக்கடிதம் ( டி ) எண் .356 , பள்ளிக்கல்வித்துறை , நாள் : 02112007 மற்றும் அரசுக்கடிதம் எண் 23339 / பக 5 ( 2 ) 20164 , நான் : 15.12.2017 ஆகியவற்றிற்கு இணங்க , சம்மந்தப்பட்டப்பணியாளர் உயர் கல்வி பயில துறையின் முன் அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும் . 


3 ) தொடர்புடைய பல்கலைக்கழகம் பட்டம் அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.


4 ) தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் பெற்றபட்டச் சான்றுக்கு இணைத்தன்மை ( Equivalency ) வழங்கி தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இணைத்தன்மை வழங்கப்படாத பட்டச்சான்றுகளைப் பரிசீலனை செய்தல்கூடாது.


5 ) தொடர்புடையப்பட்டம் , ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு அனுதித்தல் சார்ந்து நடைமுறையில் இருந்த அரசாணைகளின்படி தகுதிபெற்றதாக இருத்தல் வேண்டும் . 


6 ) ஒரு ஆசிரியரின் மொத்தப் பணிக்காலத்தில் ஏதேனும் இரு உயர் கல்வித் தகுதிகளுக்கு ஏற்கனவே இரு ஊக்க ஊதிய உயர்வுகளைப் பெற்றிருந்தால் அந்த ஆசிரியரின் பெயரினைப் பரிந்துரைத்தல்கூடாது.


7 ) பணி ஓய்வு பெற்றநாளுக்குப் பின்னர் உயர்கல்வி தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பெயரினைக் கண்டிப்பாகப் பரிந்துரைத்தல் கூடாது.


8 ) உயர்கல்வி இறுதித் தேர்விற்கான கால அட்டவணை , தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் உண்மைத்தன்மைச்சான்றுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படவேண்டும்.


9 ) தகுதிபெற்ற எந்தவொரு ஆசிரியர்பெயரும் விடுபடக்கூடாது , எதிர்காலத்தில் அவ்வாறு விடுபட்டது கண்டறியப்பட்டால் அதற்குத் தொடர்புடையப் பள்ளித் தலைமையாசிரியர் முதன்மைக்கல்வி அலுவலரே முழுப்பொறுப்பேற்க நேரிடும் . பார்வை ( 3 ) ல்கண்டுள்ள அரசாணை ( நிலை ) எண் .116 , பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR IV ) துறை , நா di : 15 : 102020- ல் , பார்வை ( 1 ) ல்கண்டுள்ள அரசாணைவெளியிடப்பட்டநாளுக்கு முன்னர் ( 09.032020 ) உயர்கல்வித்தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வுபெறாத விண்ணப்பிக்காத அரசு அலுவலர்களுக்கு 31.03.2020 - க்குள் உரிய அனுமதி ஆணைவழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பொருள்குறித் தவிவரங்களை விரைந்து அரசுக்கு அனுப்பவேண்டியுள்ள நிலையில் மறுநினைவூட்டிற்கு இடமின்றி மேற்குறிப்பிட்டுள்ளகால அவகாசத்திற்குள் உரியவிவரங்ளை அனுப்புமாறுஅனைத்து முதன்மைக்கல் விஅலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.3 comments:

  1. Evalo Azhagana GO's kalakunga.....

    ReplyDelete
  2. Aiellamaie ok but ug la chemistry mudiethu Bt staff ah eierukkura person pg tamil padiethu cross major la MA tamil padiethu pg staff tamil teacher ah promotion kudukkura systems very bad eiethukku aiethukku tet, trb

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி