பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2020

பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை!

 

12000 பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த அரசுக்கு  வேண்டுகோள்:



10 ஆண்டாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12000 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழகஅரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.


இது குறித்து  தமிழ்நாடு  அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது :-


முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா அவர்கள் 2012 ஆம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்களை  ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் நியமித்தார். 


இதற்காக அப்போது 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.


இதில் தற்போது 4000 பேர் வேலையில் இல்லை. 


12000 பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகின்றார்கள்.


தற்போது 7700 சம்பளமே தரப்படுகிறது. 


இதற்கு இப்போதும் சுமார்  100 கோடி என்ற அளவிலே  செலவிடப்படுகிறது.


10 ஆண்டுகள் ஆகும் போதும், இன்னும்  பணிநிரந்தரம் செய்யாமல் இருப்பதால் அரசின் எவ்வித பணப்பலனும் கிடைக்காமல் தவிப்பதோடு,    போனஸ் மகப்பேறுவிடுப்பு EPF ESI எதுவும் கிடைக்காமல் மிகுந்த  சிரமப்படுகின்றார்கள்.


இவர்களில் பெரும்பாலும் ஏழை விவசாய குடும்பத்தினர். 


பலர் முதல் தலைமுறை பட்டதாரிகள். 


மேலும் பொருளாதாரத்தில்  பின்தங்கிய மக்களாவர். 


இதில் 200 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.  


பெண்கள் 50 சதவீதம் இதில் பணியாற்றி குடும்பத்தை சிரமத்துடன் நடத்தி வருகின்றார்கள்.


இவர்களை முன்னேற்ற வேண்டியது அரசின் கடமையாகும். 


16500 துப்புரவு பணியாளர்கள் அதிகபட்சமாக 3 ஆண்டு பணி முடித்தவர்கள் ஊரக வளர்ச்சி துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.


இவர்களுக்கு பின்னர் பணியில் அமர்த்தப்பட்ட 5000 துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் பள்ளிக்கல்வி துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.


மேலும், சிறப்பு இளைஞர் படையினர் ஏராளுமானோர்  காவல்துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.



ஏற்கனவே தொகுப்பூதியத்தில்  பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்த ஏராளுமானோர் பின்னர்  பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.


ஆனால் 2017ஆம் ஆண்டு சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.


இதற்காக 3 மாதங்களில் கமிட்டி அமைக்கப்படும் என்ற பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 4 ஆண்டுகளாக  செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.


இதனை செயல்படுத்திட கேட்டு கொள்கிறோம்.


எனவே அதிமுக ஆட்சி காலத்திலேயே சட்டசபை அறிவிப்பை நடைமுறைபடுத்தி தற்போது பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.


மக்கள் நலப்பணிகளுக்கு எத்தனையோ கோடிகளை செலவிடும் அரசு, தமிழக மக்கள் கல்விக்காக பணியாற்றும்  பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதலாக 200 கோடி நிதி ஒதுக்கி, தற்போதைய தொகுப்பூதிய நிலையில் இருந்து மாற்றி காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி புதியவாழ்வு வழங்க  வேண்டுகிறோம்.


மேலும், பகுதிநேர ஆசிரியர்களை  பணிநிரந்தரம் செய்திட அரசு தனது கொள்கை முடிவை வெளியிட முன்வர வேண்டும் எனவும்  கேட்டு கொள்கிறோம்.


தொடர்புக்கு :-

சி. செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர் 

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 

செல் : 9487257203

22 comments:

  1. 2013 tet teachers : sir yegaluku job kuduga.
    Minister: pakalam pakalam.
    2017 tet teachers: sir yegaluku job kuduga.
    Minister: pakalam pakalam.
    2019 tet teachers: sir yegaluku job kuduga.
    Minister: pakalam pakalam.
    computer trb techers: sir yegaluku job kuduga.
    Minister: pakalam pakalam.
    Part time teachers: yegala permanent panuga sir.
    Minister:Ada nega yarupa komali poi orama velayaduga.
    Part time teachers: sir nambuka sir sathiyama nagalum teachers dha.
    Minister: Andha velaiku negala set agamatiga vaipila raja.

    ReplyDelete
  2. எங்களை பணி நிரந்தரம் செய்து பட்டதாரி ஆசிரியர் சம்பளம் வழங்க வேண்டும். அதைப் பார்த்து எங்களை ஏளனம் செய்தவர்கள் சுவரில் முட்டி முட்டி அழ வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. அறிவு கெட்ட கூமுட்டைகளா! போலி பகுதிநேர ஆசிரியர் என்று யாரைத்தான் கூறுகிறீர்கள்? இப்படி கூறிய பிறகு தான் அரசு மீண்டும் தகுதியை நிர்ணயம் செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மூலம் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பைச் செய்தது. அதில் யாரும் போலி என்று கண்டுபிடிக்கப்படவில்லை. உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல்?. இந்த அரசு கல்வித்துறையில் யாருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி நல்வாழ்க்கையை படித்தவர்களுக்கு வழங்கப்போவதில்லை. யாரும் தகுதி இல்லை என்றால் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்தவர்கள் போலிகளா? இந்த ஆட்சியாளர்களுக்கு ஏழைகளின் வலி தெரிவதில்லை. தெரிந்திருந்தால் இப்படி ஒரு மோசமான வேலைவாய்ப்பைக் கொடுத்து வாரத்திற்கு 3 அரைநாள் என்றும் மாதத்திற்கு 12 நாட்கள் என்றும் வேலை செய்ய உத்தரவிட்டு மிகவும் மட்டமான கொத்தடிமை வேலையை விட 5000 ரூபாய்க்கு நியமிக்கின்றோமே மற்ற நாட்களில் என்ன செய்வார்கள்? பத்தாண்டுகளாக இவர்களை இப்படி வைத்திருக்கின்றோமே இவர்களுக்கும் குடும்பம் உண்டு தானே? குடும்பத்திற்கு குறைந்த பட்சம் இவ்வளவு பணம் வேண்டுமே என்ற அடிப்படை மனிதாபிமானத்துடன் கூடிய அறிவு இல்லாமல் நீங்கள் திட்டப் பணியாளர்கள் என்று கூற எப்படி மனம் வருகிறது? உங்களால் திட்டப்பணியிலிருந்து மாற்றி சம்பளம் கொடுக்க முடியாதா? இதில் ஏழைகள் தான் அதிக அளவில் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவோமே என்ற எண்ணம் துளியும் இல்லை. யார் குடும்பம் கெட்டால் என்ன என்ற எண்ணம். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளியில் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டு இரவு பகல் பாராமலும் (கணிப்பொறி ஆசிரியர்கள்) உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதனை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் அறிவர். இங்கு மனிதாபிமானம் இல்லை என்றால் என்ன வென்று சொல்வது. தகுதித் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து அதற்காக கடின உழைப்பைக் கொடுத்தவர்கள் தவித்து வருகிறார்கள். பணி நியமன தடைச் சட்டம் கொண்டுவரும் இந்த ஆட்சியாளர்கள் தற்போது அனைத்து பணிகளையும் நிரப்ப மனமில்லாமல் வருடக் கணக்கில் பல்வேறு காரணங்களைக் கூறி நிறுத்தி வைத்துள்ளார்கள்.

      Delete
    2. Thampi..athuku tet pass panniruka vendum....athuku vakku illa....pani nirantharam vendumaa....poi first padichu pass panu

      Delete
    3. Ada koomuttai engaluku yedhuda tet

      Delete
    4. Neeinga koooomuttai endru solvathairu ungaluku antha alavuku thaguthi illai. Entha indiyavula ena satathitam podurang enpathu umaku thriyavellai agaiyal neeinga than. .........

      Delete
  3. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    ReplyDelete
  4. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இந்த கொசு தொல்லை தாங்க முடியல நாராயணா...

      Delete
  5. Ungaluku enna arikudhA..ea da arichu vida veanduma moodungada naigal..ptt conform agum..

    ReplyDelete
  6. தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய முடியுமா.
    தெளிவாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குனர் அவர்கள் செயல்முறைகள் தெளிவாக கூறி உள்ளார்

    பகுதி நேர ஆசிரியர்கள் மே மாதம் ஊதியம் கேட்டதற்கு மத்திய அரசு திட்ட அறிக்கையின்படி ஒரு மாதத்திற்கு 7000வீதம் ஒரு ஆண்டுக்கு 84ஆயிரம்கொடுக்க சொன்னதன் அடிப்படையில் மேமாதம் சிறப்பு விடுமுறை கொடுத்து மாதம் 7700ஆக 11மாதம்சேர்த்து மத்திய அரசின் அறிவிப்பில் உள்ள படி 84ஆயிரம் தருகிறது தமிழக அரசு...

    ReplyDelete
    Replies
    1. Yenada thodanaduki naga idhula kekara questions key unkita answer pana theriyam illaye ne central govt range ku pesara velakenna nee sorudhana thingara theriyam irudha evidence kududa ipo part time la poli teachers irukaganu summa inga vandhu comments pota ine asigama illa romba asigama pesuva S.A.R

      Delete
  7. அறிவு கெட்ட கூமுட்டைகளா! போலி பகுதிநேர ஆசிரியர் என்று யாரைத்தான் கூறுகிறீர்கள்? இப்படி கூறிய பிறகு தான் அரசு மீண்டும் தகுதியை நிர்ணயம் செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மூலம் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பைச் செய்தது. அதில் யாரும் போலி என்று கண்டுபிடிக்கப்படவில்லை. உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல்?. இந்த அரசு கல்வித்துறையில் யாருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி நல்வாழ்க்கையை படித்தவர்களுக்கு வழங்கப்போவதில்லை. யாரும் தகுதி இல்லை என்றால் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்தவர்கள் போலிகளா? இந்த ஆட்சியாளர்களுக்கு ஏழைகளின் வலி தெரிவதில்லை. தெரிந்திருந்தால் இப்படி ஒரு மோசமான வேலைவாய்ப்பைக் கொடுத்து வாரத்திற்கு 3 அரைநாள் என்றும் மாதத்திற்கு 12 நாட்கள் என்றும் வேலை செய்ய உத்தரவிட்டு மிகவும் மட்டமான கொத்தடிமை வேலையை விட 5000 ரூபாய்க்கு நியமிக்கின்றோமே மற்ற நாட்களில் என்ன செய்வார்கள்? பத்தாண்டுகளாக இவர்களை இப்படி வைத்திருக்கின்றோமே இவர்களுக்கும் குடும்பம் உண்டு தானே? குடும்பத்திற்கு குறைந்த பட்சம் இவ்வளவு பணம் வேண்டுமே என்ற அடிப்படை மனிதாபிமானத்துடன் கூடிய அறிவு இல்லாமல் நீங்கள் திட்டப் பணியாளர்கள் என்று கூற எப்படி மனம் வருகிறது? உங்களால் திட்டப்பணியிலிருந்து மாற்றி சம்பளம் கொடுக்க முடியாதா? இதில் ஏழைகள் தான் அதிக அளவில் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவோமே என்ற எண்ணம் துளியும் இல்லை. யார் குடும்பம் கெட்டால் என்ன என்ற எண்ணம். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளியில் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டு இரவு பகல் பாராமலும் (கணிப்பொறி ஆசிரியர்கள்) உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதனை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் அறிவர். இங்கு மனிதாபிமானம் இல்லை என்றால் என்ன வென்று சொல்வது. தகுதித் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து அதற்காக கடின உழைப்பைக் கொடுத்தவர்கள் தவித்து வருகிறார்கள். பணி நியமன தடைச் சட்டம் கொண்டுவரும் இந்த ஆட்சியாளர்கள் தற்போது அனைத்து பணிகளையும் நிரப்ப மனமில்லாமல் வருடக் கணக்கில் பல்வேறு காரணங்களைக் கூறி நிறுத்தி வைத்துள்ளார்கள்.

    ReplyDelete
  8. Podhum part time teachers adimaiya irudha kaala la dha Nidhi paduvom computer teacher ine office computer work pana venam ipo vitta namba nelama yepovum maradhu

    ReplyDelete
  9. ஒரு பிரிவினர் அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர். அது அவர்கள் விருப்பம். அதை நிறைவேற்றுவதும் மறுப்பதும் அரசின் செயல். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை. பகுதிநேர ஆசிரியர்கள் நிர்ணயித்த தகுதி மூலம்தான் தேர்வு செய்யப்பட்டனர். ஒருவேளை அதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தகுந்த ஆதாரத்துடன் வழக்கு தொடரலாமே.. ஒவொருவருக்கும் தங்களின் வாழ்வாதாரம்தான் முக்கியம். அதற்காகத்தான் போராடுகிறார்கள். இதில் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவ்வாறு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டால் வேலை செய்யாமல் அரசு சம்பளம் கொடுக்குமா.. சரி அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அதன்மூலம் அந்த இழப்பு என்னுடைய வரியில் இருந்துதான் ஈடுகட்டப்படுகிறது என்று குமுறும் சிலர் இதற்க்கு முன் லஞ்சம் ஊழல் அரசு அதிகாரிகளின் போக்கு போன்ற எத்தனை பிரச்சனைகளுக்கு போராடி இருக்கின்றனர் ... இதை கேட்டால் அய்யய்யயோ நாங்கள் அந்த மாதிரி போராடமாட்டோம் .. ஓட்டுக்கு பணம் வாங்குவோம்... கருத்து கூறுவோம்... இப்படியே பொழப்பை ஓட்டுவோம் .. மேலும் ஆசிரியர்கள் தான் அடிச்சா திருப்பி அடிக்காத சாதுவானவர்கள்... அவர்களை மட்டுமே வச்சி செய்வோம்.. மத்தபடி அரசியல் லஞ்சம் ஊழல்... எங்களுக்கு உடம்பு தாங்காது சாமி...

    ReplyDelete
  10. Ayo Ayo vairu eriyudhu part time teachers ku permenate posting poata avnanugala kaiyla pidika mudiyuma mudiyula...eriyudhu

    ReplyDelete
  11. Eeeeee kavalai padatha bro...west la sun rise panninalum part time teachers permenate agadhu ...andha posting ellathukum exam vatchu feel pannutum...

    ReplyDelete
  12. தகுதி இல்லாதவர்களையும் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவனையும் எப்படிடா பணி நிரந்தரம் செய்ய முடியும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி