முதன்மைக் கல்வி அலுவலருக்கு கொரோனா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2020

முதன்மைக் கல்வி அலுவலருக்கு கொரோனா



தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல ருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது. தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவராக என்.கீதா ( 55 ) பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு , கோவையிலிருந்து பணியிட மாற்றம் பெற்று தருமபுரியில் பணியாற்றி வருகிறார். கடந்த செப் .31 - ஆம் தேதி இவருக்கு சளி , காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அக் .1 - ஆம் தேதி அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் , தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதன்மைக் கல்வி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி