ICT விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2020

ICT விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.



ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்குவதற்கு ஏதுவாக ஆசிரியர்களிடமிருந்து கருத்துருக்களை பெற்று அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் / தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆர்வமுடன் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து சிறப்பாக பணியாற்றும் தகுதியுடைய ஆசிரியர்களின் விவரத்தினை இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு படிவத்துடன் உரிய ஆதாரங்களை இணைத்து 4 பிரதிகள் இவ்வலுவலக அ 7 பிரிவில் 03.10.2020 மாலை 04.00 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


மேற்காண் விருது பெற தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லை எனில் " இன்மை ' ' அறிக்கை அனுப்பி வைக்க அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு / அரசு நிதி உதவிபெறும் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி