NMMS - உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட 703 மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2020

NMMS - உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட 703 மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

NMMS கல்வி உதவித்தொகை - 2016-17ஆம் ஆண்டில் வங்கிக் கணக்கு சரியாக இல்லாத காரணத்தால் உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மின்னஞ்சலின்படி கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான NMMSS கல்வி உதவித் தொகை பெறுவதற்காக 6492 தகுதியுள்ள மாணவ மாணவியருக்கு விண்ணப்பிக்கப்பட்டது . அவற்றில் 5789 மாணவ / மாணவியற்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள 703 மாணவ / மாணவியரின் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இல்லாததாலும் அக்கணக்கு விவரங்கள் நடைமுறையில் வைக்கப்படாததாலும் கல்வி உதவித் தொகை செலுத்த இயலவில்லை என தெரிவித்து மேற்படி 703 மாணவ / மாணவியர்களின் தற்போது நடைமுறையில் உள்ள சரியான வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து உடன் அனுப்பிவைக்குமாறு இவ்வியக்ககத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , மேற்படி உதவித் தொகை செலுத்தப்படாத 703 ) மாணவியர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . அவற்றில் தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த உதவித் தொகை கிடைக்கப் பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களின் தற்போது சரியான நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மாணவ / மேலும் , இப்பணியை 23.10.2020 ஆம் தேதிக்குள் முடித்து அன்று மாலை 5 மணிக்குள் idnsed@nic.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி