TET Certificate - விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Oct 23, 2020

TET Certificate - விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

 


நீட் விவகாரத்தில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தெலங்கானா மாநிலத்தில் பெய்த மழை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர், ரூ.3.3 கோடி மதிப்பீட்டில் உதவிகளை அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் இழப்புகள் ஏற்படும்போது நாம் உதவி வருகிறோம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் 7 ஆண்டு காலம் மட்டுமே செல்லுபடியாகும். அதை ஆயுட்காலம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ஒரு மாத காலத்துக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமி, பிரதமருக்குக் கடிதம் எழுதினார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ், ஆயுட்காலம் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும்.

நீட் தேர்வு விவகாரத்தில், தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்'' என்று அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

29 comments:

 1. ஐயா இதற்கு முன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் நிலையை சற்றே சிந்திக்கவும். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இன்னும் பணி வழங்கவில்லை இப்படி இருக்கும் நிலையில் இப்போது இந்த அறிவிப்பு தேவையா?

  ReplyDelete
  Replies
  1. இந்த அறிவிப்பு சரியே ஆனால் வயதின் அடிப்படையில் பணி நியமனம் செய்தால் அனைவரும் பயன் பெறுவர் அரசு இதை செய்தால் நன்றாக இருக்கும்.

   Delete
  2. இந்த அறிவிப்பு சரியே ஆனால் வயதின் அடிப்படையில் பணி நியமனம் செய்தால் அனைவரும் பயன் பெறுவர் அரசு இதை செய்தால் நன்றாக இருக்கும்.

   Delete
  3. இந்த அறிவிப்பு சரியே ஆனால் வயதின் அடிப்படையில் பணி நியமனம் செய்தால் அனைவரும் பயன் பெறுவர் அரசு இதை செய்தால் நன்றாக இருக்கும்.

   Delete
 2. அமைச்சர் அவர்கள் விரைவில் என்ற வார்த்தையை விட செயலில் காண்பித்தால் மிக நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 3. Dubakkoor solvathellam poi poiyai thavira verondrum ellai..

  ReplyDelete
 4. Fool. You announced 40 is the age limit to get job. Is there any use of converting the TET certificate into Forever (Lifelong)...? You fool....

  ReplyDelete
  Replies
  1. தமிழ்ல foolனு அப்பாவது ஓரைக்குதான்னு பாப்போம்

   Delete
  2. நாம் அனைவரும் படித்தவர்கள்...

   Delete
  3. நாம் அனைவரும் படித்தவர்கள்...

   Delete
 5. Edapadi iyya vazhga vazhga vazhga vazhga vazhga

  ReplyDelete
 6. Sengotayan iyya vazhga vazhga vazhga vazhga vazhga

  ReplyDelete
 7. Tet pass pannavangalku posting poduvangala friends

  ReplyDelete
 8. Replies
  1. அவன் வந்தா என்ன பண்ணுவான்

   Delete
  2. இவங்க வந்து என்ன கிழிச்சாங்க?

   Delete
 9. இவன் ஒரு பொய்யன் இவன் சொல்றதலாம் நம்பாதீங்க.தப்பித்தவறி கூட இந்த நாய்களுக்கு ஓட்டு போட்றாதிங்க.தி.மு.க வுக்கு போடுங்க.ஸ்டாலின் நமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.இவன மாதிரி போஸ்டிங் போடறன்னு சொல்லி ஸ்டாலின் ஏமாத்த மாட்டார்.அவர்கள் ஊழலே செய்தாலும் இவ்வளவு மனசாட்சி இல்லாமல் வயது குறைப்பு இந்த மாதிரி எல்லாம் செய்யவே மாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக யார் வயித்தலயும் அடிக்க மாட்டாங்க. அதிமுக‌ எப்பவுமே அப்படிதான். மனசாட்சி இல்லாத ஆட்சி. எம் ஜி ஆர் முதல் இன்றுவரை அனைவருமே. திமுக அப்படி இல்லை . தன்னால் முடிந்த வரை மக்களுக்கு செய்தார்கள். அனைவருக்கும் ஆட்சி , மக்கள் ஆட்சி திமுக. வாழ்க திமுக, வெல்க திமுக.

   Delete
  2. Murugan, leela jamuna rani solradhu correct. Thiru stalin solradhai kandippa seivar.

   Delete
 10. Part time teacher ku yedhachum help pannuga

  ReplyDelete
 11. ஐயா கல்விச்செய்தி உரிமையாளரை ஏன் இவ்வளவு விளம்பரங்களை முன்னிலை படுத்தி காட்டுகிறீர்கள் ஒவ்வொரு முறையும் கல்வி செய்தியின் உள்ளே செல்லும்போதும் ஏதாவது ஒரு தேர்வு வந்துவிடாதா ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து என்று ஆவலோடு இருக்கிறோம் ஆனால் உங்களின் லாபத்திற்காக விளம்பரங்கள் அதிகமாக வருகிறது போதாக்குறைக்கு அரசியல் விளம்பரம் வேறு.....

  ReplyDelete
  Replies
  1. விளம்பரங்களற்ற டெட் trt pgtrb பற்றிய உண்மை தகவல்கள் அறிந்துகொள்ள புத்தகசாலை வலைத்தளம் பார்க்கவும்

   Delete
 12. Part time teacher ku yedhachum help pannuga

  ReplyDelete
 13. விரைவிலா....?!! You... idiot...

  ReplyDelete
 14. அனைவரும் Dmkவுக்கு ஓட்டு போடுங்க

  ReplyDelete
 15. உதயசூரியன் மூலம் ஆசிரியப் பணி உதயமாகட்டும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி