தனியார் பள்ளிகளில் 2-ம் கட்ட சேர்க்கைக்கு 16,500 பேர் விண்ணப்பம்: நாளை குலுக்கல் நடைபெறுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2020

தனியார் பள்ளிகளில் 2-ம் கட்ட சேர்க்கைக்கு 16,500 பேர் விண்ணப்பம்: நாளை குலுக்கல் நடைபெறுகிறது

 


தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை இடங்களில் சேருவதற்கு 16,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் அதிகமான தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன. இதற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கையில் 86,326 பேர் விண்ணப்பித்தனர். அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு 2-ம்கட்ட சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நவ.7-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது 16,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டு, தேர்வான மாணவர்களின் பட்டியல் இன்று(நவ.11) அந்தந்த பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்படவுள்ளன.

ஒரு பள்ளியில் அதிகளவிலான விண்ணப்பங்கள் வந்திருந்தால் நாளை (நவ.12) வருவாய்த் துறை அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்பு குலுக்கல் மூலம்குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். இந்த குலுக்கலில் பெற்றோரும்பங்கேற்கலாம். நேர்மையான முறையில் குலுக்கல் நடப்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

2 comments:

 1. இப்படி ஒரு சேர்க்கை மூலம்,
  தனியார் பள்ளி களை,
  ஊக்க படுத்தி,
  பல நூறு கோடி ரூபாய் பணத்தை,
  வாரிவழங்கும்
  அரசு,
  அந்த தொகையினை,
  வாழ்வாதாரம் இன்றி வாடும்,
  தனியார் பள்ளி
  ஆசிரியர்களுக்கு
  பிழைப்பு ஊதியமாக மாதம் குறைந்த பட்சம்,
  6000 ரூபாய் வரை
  வழங்கினால்,
  எத்தனை பேர்,
  பயனடைவார்கள், ???
  தயவு கூர்ந்து பரிசீலிக்க வேண்டும்,
  ஆட்சியாளர்கள்...

  ReplyDelete
 2. ஆலே இல்லாத டீ கடைக்கு......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி