நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2020

நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை விளக்கம்!

 


10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. 

கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. 


முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது.


இதனிடையே, நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜூனில் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, தேர்வுத்துறை அரசிடம் சமர்ப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.


இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்தான் அது தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

7 comments:

  1. Part time teachers conform pannuga...

    ReplyDelete
  2. Uiere poguthunnalum yethum pannamattanga

    ReplyDelete
  3. Yarum yedhum comments reply panadhiga iva venum nu yela blog la part time teachers ku ipadi comments potu keta per vara vaika parkara venum nu ipo Iruka situation la yarum yedhum kekala pavam private school teacher and professor la job salary illama Iruka ga gov school pasaga online class ku net connection and laptop vasadhi senji kuduga mudija amount Iruka teachers poor children yarukachum help panuga avlo dha nanum part time teacher dha ye salary use pani rendu student ku cell vagi kudutha apadi help panalam negative comments podra yarayum kanduka venam corona la irudhu tamilnadu sari aganum avlodha.

    ReplyDelete
    Replies
    1. Poda naiya idhuvu Mela oru comments podardhu again kela oru periya length ku oru comments podurdhu ....EA da part time teachers pathi ellarukum theriya neeya oru comments podurdhu adhuku neeya reply pandrdhu idhu ku ......?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி