பள்ளிகள் திறப்பில் அரசு முனைப்பு காட்ட தனியார் பள்ளிகளின் நிர்ப்பந்தம் காரணமா?- விருப்பம் உள்ள மாணவர்களை அனுமதிப்பது குறித்து பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2020

பள்ளிகள் திறப்பில் அரசு முனைப்பு காட்ட தனியார் பள்ளிகளின் நிர்ப்பந்தம் காரணமா?- விருப்பம் உள்ள மாணவர்களை அனுமதிப்பது குறித்து பரிசீலனை

 


பள்ளிகள் திறப்பில் அரசு முனைப்பு காட்டுவதற்கு, தனியார் பள்ளிகள் அழுத்தம் தருவதே காரணம் என்று கூறப்படுகிறது.

கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நவ.16-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்ததால், பெற்றோரின் கருத்துகளை அறிந்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இன்று (நவ.9) நடைபெறுகிறது.

இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தரும் அழுத்தம் காரணமாகவே பள்ளிகள் திறப்பில் முனைப்பு காட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆரம்பம் முதலே நோய்த் தொற்றின் தீவிரம் பற்றிய கவலை இல்லாமல், வருவாயை மட்டுமே கணக்கில் கொண்டு பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் தீவிரம்காட்டிவருகின்றன. இதற்காக பல்வேறு வழிகளில் கல்வித் துறைக்கும், அரசுக்கும் தொடர்ந்து அழுத்தம் தருகின்றன.

அதன் விளைவாகவே, அக்டோபரில் பள்ளிகளை திறக்க அரசுமுன்வந்தது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்ததால், அந்த முடிவு கைவிடப்பட்டது. தொடர்ந்து, கல்வி ஆண்டு தாமதமாவது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நவ.16-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவானது.

இந்நிலையில் கரோனா 2-வது அலை, வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்து, இம்மாத இறுதியில் நோயின் தீவிரத்தை அறிந்து, அதற்கேற்ப முடிவெடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பெற்றோரின் விருப்பத்தை அறிவதும் அவசியம் என்பதால், கருத்துக் கேட்பு கூட்டத்துக்கும் அரசு ஏற்பாடு செய்தது. இது தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகள் திறப்பு தொடர்பாக கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பின்போது, பள்ளிகளை திறக்க பல பெற்றோர் வலியுறுத்துவதாக 80 சதவீத தனியார் கல்வி நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பித்தன. அதேபோல, தற்போது நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்தையும் தனியார் பள்ளிகள் தங்களுக்கு சாதகமாகவே மாற்றிக்கொள்ளும்.

பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று அரசுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்கின்றன. இதனால், விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதுநோய்ப் பரவலுக்கு வழிவகுத்துவிடும். தவிர, அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 50 வயதை தாண்டியவர்கள். 40 வயதை கடந்தவர்களும்கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்த விவகாரத்தில் நிபுணர் குழுவுடன் ஆலோசித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

10 comments:

  1. ேபருந்தில் ெகா ரோனாவராதா

    ReplyDelete
  2. பள்ளி , கல்லூரி திறக்க எதிர்க்கும் நண்பர்கள் , மாணவ மாணவிகள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து தற்காப்பு செய்ய , வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வார்களா? கடை வீதியிலும் ஷாப்பிங் மால்களிலும் , வெளி உலகின் எங்கும் இவர்கள் பயணிக்க வில்லை என உறுதி செய்வார்களா?
    பள்ளி கல்லூரி செல்லாமல் கல்வி கட்டணம் செலுத்தாமல் , தேர்ச்சிமட்டும் வேண்டும் என நினைக்கிறார்களா?
    பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்களின் நலனுக்கு யார் கவலை பட்டீர்கள் ஏழு மாதமாக மத சம்பளம் இல்லாமல் , அரைகுறை வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குடும்பங்கள் பற்றி கவலைகொள்ளாத சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள். பேருந்துகள் , ரயில்கள், டாஸ்மாக் பார்கள், கடை வீதி ,சினிமா திரை அரங்கு, அரசியல் கூட்டங்கள் இங்கெல்லாம் கொரோன பரவாது .பள்ளி கல்லூரிகளில் மட்டும் பரவுமா ?.
    அருமை சமூக ஆர்வலர்கள் கவணியுங்கள் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும்….. அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் போல மாத சம்பளம் கிடைக்க வழி செய்துவிட்டு பள்ளி கல்லூரி திறக்க வேண்டாம் என போராடுங்களேன் நாங்களும் உங்களோடு கூப்பாடு போட வருகிறோம்.
    இப்படிக்கு
    வறுமையில் வாடி கொண்டிருக்கும் தனியார் பள்ளி ,கல்லூரி ஆசிரியர் குடும்பங்கள்

    ReplyDelete
  3. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி செல்லாமலே முழு சம்பளம் கிடைக்கிறது.அவர்களுக்கும் தனியார் யள்ளி போல சம்பளம் பிடித்தம் இருந்தால் அமைதியாக இருப்பார்களா?

    ReplyDelete
  4. பள்ளி , கல்லூரி திறக்க எதிர்க்கும் நண்பர்கள் , மாணவ மாணவிகள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து தற்காப்பு செய்ய , வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வார்களா? கடை வீதியிலும் ஷாப்பிங் மால்களிலும் , வெளி உலகின் எங்கும் இவர்கள் பயணிக்க வில்லை என உறுதி செய்வார்களா?
    பள்ளி கல்லூரி செல்லாமல் கல்வி கட்டணம் செலுத்தாமல் , தேர்ச்சிமட்டும் வேண்டும் என நினைக்கிறார்களா?
    பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்களின் நலனுக்கு யார் கவலை பட்டீர்கள் ஏழு மாதமாக மத சம்பளம் இல்லாமல் , அரைகுறை வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குடும்பங்கள் பற்றி கவலைகொள்ளாத சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள். பேருந்துகள் , ரயில்கள், டாஸ்மாக் பார்கள், கடை வீதி ,சினிமா திரை அரங்கு, அரசியல் கூட்டங்கள் இங்கெல்லாம் கொரோன பரவாது .பள்ளி கல்லூரிகளில் மட்டும் பரவுமா ?.
    அருமை சமூக ஆர்வலர்கள் கவணியுங்கள் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும்….. அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் போல மாத சம்பளம் கிடைக்க வழி செய்துவிட்டு பள்ளி கல்லூரி திறக்க வேண்டாம் என போராடுங்களேன் நாங்களும் உங்களோடு கூப்பாடு போட வருகிறோம்.
    இப்படிக்கு
    வறுமையில் வாடி கொண்டிருக்கும் தனியார் பள்ளி ,கல்லூரி ஆசிரியர் குடும்பங்கள்

    ReplyDelete
  5. சரியான செருப்படி கேள்வி

    ReplyDelete
  6. Government teacher yarum work panurathu ila school ila apram ethuku full salary podurenga government kasu ila solluranga school open ila cls ila work pannamattum salary podalamula

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி