அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது ? ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2020

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது ? ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை!



அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது, கலங்கும்  பேராசிரியர்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை...


கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டு அனைத்து சான்றிதலும் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்பதுக்கு அழைப்பாணை விடுமா என தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர், தற்பொழுது தேர்தல் நெருங்கும் நேரத்தில்  நியமன பணிகள் தாமதமானால், தேர்வர்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகள் தாமதிக்க வேண்டும். கடந்த 2013 ஆண்டுக்கு  பிறகு கலை, அறிவியல் கல்லூரிக்கு எந்த ஒரு நிரந்தர ஆசிரியர்களும் நியமிக்கபடவில்லை. இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் நிலையில் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக தேர்வு வாரிய இணையதளத்தை நாள்தோறும் பார்த்தபடி இருக்கும் SLET/NET/PhD முடித்தவர்கள் ஒரு வாய்ப்பு கிடைக்காத என கலக்கத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசும், உயர்கல்விதுறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் உடனடியாக பணி நியமன பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து தேர்வர்களும் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

  இப்படிக்கு, தேர்வர்கள், தமிழ்நாடு தனியார் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு..

50 comments:

  1. P.hd முடித்தவர்களுகும் SLET NET தேர்வு வைத்து கல்லூரியில் பணி நியமனம் செய்வதுதான் நல்லது.அதிகமானோர் குறுக்கு வழியில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு tet trb மூலம் நியமனம் செய்யும் போது p.hd க்கும் பணி நியமன தேர்வு வைப்பது சிறந்தது.

    ReplyDelete
    Replies
    1. இனிவரும் காலங்களில் SET/NET என்பது PhD-ல் சேருவதற்கான தகுகி தேர்வில் இருந்து விலக்கு மட்டுமே, PHD இல்லையென்றால் கல்லூரிக்கு பேராசிரியர் பணியை கனவிலும் கூட நினைத்து பார்க்க முடியாது...தகுதி தேர்வில் என்ன திறமை என கடந்த பாலிடெக்னிக் தேர்வானது நாட்டு மக்கள் நன்கு அறிவர்

      Delete
    2. நேரடி நியமனம் என்ற பெயரில் தகுதி இல்லாதவர்கள் வெறும் certificate மட்டும் வைத்துக்கொண்டு 35,40லட்சங்களை கொடுத்து பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இவர்களால் எப்படி கல்வி தரத்தை உயர்த்த முடியும்?p.hd முடித்தவர்களால் பணி நியமன தேர்வு எழுதி பணி பெற முடியாத என்ன???

      Delete
    3. Ph.D ஏமாற்றி முடித்தவர்கள் 10% கஷ்டப்பட்டு முடித்தவர்கள் 90% பேர். SET, NET என்பது 6 மாத காலம் தான், நான் எந்த படிப்பையும் குறைவாக சொல்லவில்லை. ஆனால் Ph.D என்பது 10 வருடம் 12 வருடம் என செய்து முடிக்க கூடியது. Ph.D thesis submit செய்து இரண்டு அல்லது மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை. Ph.D thesis foreign, and other state Universityயிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் அந்த thesisயை திருத்தி அனுப்பி வைத்தவுடன் Viva-voce நடத்தப்படுகிறது. பேராசிரியர் பதவிக்கு பகுதியே Ph.D தான். Ph.D யின் வலி தெரியாமல் கருத்து தெரிவிக்காதீர். Ph.D எனபதே உங்களுக்கு எழுத தெரியவில்லை. அப்புறம் எப்படி உங்களுக்கு Ph.D யின் வலி தெரிய போகிறது.

      Delete
    4. பேராசிரியர் பதவிக்கு பகுதியே என்று குறிப்பிட்டுள்ளேன். Sorry பகுதியே இல்லை தகுதியே

      Delete
    5. கடினமான Ph.d முடித்த உங்களால் தகுதி தேர்வும் சாத்தியமே.நியமன தேர்வு ph.dயை விட கடினமில்லை.

      Delete
    6. ph.d எழுத தெரியாமல் இல்லை எழுதும் போது தாங்களுக்கு எவ்வாறு தவறு ஏற்பட்டதோ அதே போன்றுதான்.

      Delete
    7. ph.d எழுத தெரியாமல் இல்லை எழுதும் போது தாங்களுக்கு எவ்வாறு தவறு ஏற்பட்டதோ அதே போன்றுதான்.

      Delete
    8. இவரு PhD யை வெரும் certificate என்று சொல்கிறார், இவரால் ஏதாவது பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி படிப்பதற்கான நுழைவுத்தேர்வில் pass பண்ண முடியுமா....SET என்பது நுழைவுத்தேர்வுக்கான விலக்கு மட்டுமே, உயர்கல்வித்துறைக்கு தெரியாத விஷயம் அல்ல

      Delete
    9. உங்களுக்கு பணி நியமன தேர்வு எழுதாம பணி கிடைக்க வேண்டும்.ph.d க்கு பணி நியமன தேர்வு வைப்பதே சிறந்து.6 விருந்து 12 ஆம் வகுப்பு வரை tet trb வைத்து பணி நியமனம் நடைபெறும் போது பேராசிரியர் பணிக்கு நியமன தேர்வு வைத்து பணி நியமனம் செய்வதுதான் நல்லது.சாதாரண C D நிலை பணியாளர்களுக்கே தேர்வு வைக்க வேண்டும் என்று கூறும் அரசு பேராசிரியர் பணிக்கு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்வதுதான் நல்லது.

      Delete
    10. Accepted reason.
      அ ஆ இ ஈ சொல்லிக்

      Delete
    11. Accepted reason. அ ஆ இ ஈ சொல்லிக்கொடுக்கப் போர் 1 ம் வகுப்பு ஆசிரியருக்கே தேர்வு வைத்து பணி நியமணம் செய்யும் போது கல்லூரி பணிக்கு தேர்வு வைத்து தான் பணி நியமணம் செய்ய வேண்டும். PH.D மற்றும் SET/ NET கல்லூரி பேராசிரியர் பணிக்கான தகுதியே தவிர அது பணி நியமணத்திற்கான தகுதி இல்லை.

      Delete
    12. தேர்வு என்பதை PhD முடித்தவர்களுக்கு ஒரு பெரிய விசயம் இல்லை, ஒருவர் ஆராய்ச்சி படிப்புக்கு சேர வேண்டும் NET தேர்விற்கு இணையான நுழைவுத்தேர்வை சந்திக்க வேண்டும், பின் தேர்ச்சி அடைந்த பிறகு Oral presentation மூத்த முனைவர் முன்னிலையில் சமர்பிக்க வேண்டும், இவற்றில் 1/10 போட்டியாளர்கள் இருப்பார்கள் தோராயமாக, பிறகு துறை ரீதியான presentation நெறியாளாளர் மற்றும் துறை தலைவர் முன்னிலையில் சமர்பிக்க வேண்டும் எல்லாம் OK ஆன பிறகுதான் உங்களுக்கு கல்வி பயில அனுமதி, முதலாம் ஆண்டில் இரண்டு தேர்வை மீண்டும் சந்தித்து தேர்ச்சி பெற்றால் கல்வியை தொடர முடியும், இல்லையேல் பெட்டி படுக்கையுடன் கிளம்பலாம், தொடர்ந்து ஆராய்ச்சி படிப்பை முடிக்கும் வரை National & international publication என பல இடங்களில் உங்களுடைய புதுமையை நிரூபணம் செய்ய வேண்டும், இவற்றை செய்வதற்கு பதிலாக பல தகுதி தேர்வுகளில் வெற்றிபெற்று விடலாம்..இன்னும் சொல்லப்போனால் 6 மாதம் போதும்...PhD என்பது ஒரு கனவு, அது ஒரு degree அதோடு எந்த ஒரு தகுதி தேர்வும் இணையாகாது...யாரோ ஒருவர் குறுக்கு வழியில் வாங்கி இருப்பார்கள் அதை வைத்து விவாதம் செய்வது நல்லதன்று..தகுதி தேர்வு வேண்டும் என நாம் சொல்லலாம் ஆனால் UGC வரையறை செய்ய வேண்டும்...ஒராண்டு அமர்வில் கட்டாயம் SET/NET பெற முடியும், ஆனால் PhD அப்படியா..? இன்றைய சூழ்நிலையில் அரசு பல்கலைக்கழகங்களில் இது போன்று விவாதம் செய்பவர்கள் தங்களது திறமையை காட்டட்டுமே...என்னிடம் NET, PhD இரண்டுமே இருக்கின்றது அதனால் இவற்றில் எது கடினம் என்ற அனுபவம் எனக்கு உள்ளது...ஒருவர் PhD முடிக்க குறைந்தது 7 ஆண்டுகள் ஆகும்..விவாதம் செய்பவர்கள் முதலில் உயர்கல்வி விதிமுறைகளை நன்கு கவனத்தில் கொள்ளவும், பல்கலைக்கழக அளவில் இனி SET/NET க்கு வேலையில்லை, வரும் காலங்களில் கல்லூரிகளுக்கும் நடைமுறை வரும்..

      Delete
    13. Haha, If possible to clear SET or NET in one year Ph.D candidates can clear NET.In India 99% of the Ph.D thesis submitted is accepted. Whether it is paid journal or not it is accepted. Ph.Ds are sold everywhere except in Universities. The real tough and talent is clearing NET. I am working in arts and science college where around 40 nonqualified staff are sent out since they don't have qualifications.They are my teachers I mean they are working in college for more than 14 years and they are unable to clear NET.. Clearing NET should be mandatory to work in colleges and universities. I have seen many Ph.D scholars who are unable to write an paragraph in their research. Now there are many agencies are selling projects, writing works, etc. I feel NET + Ph.D will be the correct option. Why not?? As some people here said we r recruiting the teachers of 1st std to 12th std by exams only. Why not for college? Engineering college TRB is conducted for those who have SET or NET or Ph.D..Why not for arts and science college?

      Delete
    14. In India 99% of Ph.D's are accepted even at first time and remaining 1% is acceptable later after corrections. But NET is not like that. You can't clear if you don't have knowledge. I have seen many people trying for NET for more than 14 years. School staff should be recruited on the basis of exams why not college staff? You are telling polytechnic TRB scam. Do u think all exams are happening like this.? Do u think all the candidates join by TRB are joining by money only??

      Delete
  2. தேர்வு வைத்தால் திறமையானவர்கள் பணிக்கு சென்று விடுவார்கள் அப்புறம் எப்படி ஒரு பணி இடத்திற்கு 35 இலட்சம் வாங்குவது திறமையானவர்கள் நிலை? அனைத்து பணிக்கும் தேர்வு வைக்கும்பொழுது இந்த பணிக்குமட்டும்தேர்வு வைக்க தயங்குவது ஏன்? நேர்காணலுக்கு காரணம் இதுதான் SET,NET, முடித்தவர்களின் நிலை? உள்ளது தயவு செய்து TRB போட்டித் தேர்வு மூலம் விரிவுரையாளாகளை நியமித்தால் கல்வி தரம் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அரசாங்கம் காதுக்குப் போச்சுன்னா மிகப்பெரிய சந்தோஷம்

      Delete
    2. எல்லாம் சம்பத்தப்பட்ட துறைக்கு நன்றாகவே தெரியும்...

      Delete
  3. PG-TRB Chemistry

    Online Live classes

    Admission going on...

    Fully Short cut Methods
    Complete syllabus study Materials
    Chapterwise Q & A
    Online Live doubt clearness sessions
    Hand Written Materials
    100% result Oriented teaching

    Study Material & Test Batch available

    What's App
    9489147969
    9489145878

    ReplyDelete
    Replies
    1. ஐயா சாமி ௮ங்க கல்யாணம் நடக்குமோ நடக்காதோ தெரியல ஆனால் ஒ௫சிலர் சாப்பாட்டுக்கு தான் ௮லையராங்க

      Delete
  4. திராவிட ஆட்சி ஒழிந்தால் மட்டுமே தமிழகம் தலைநிமிறும்

    ReplyDelete
  5. we need recruitment test for lecturer post. simply interview is not fair. how do you assess the quality by few questions. any one can get pass or fail marks in interview by luck or fate. recruitment through competitive exam is the right solution. even phd nowadays bought from Universities. not everyone do it genuinely. many are spending money and get it.

    ReplyDelete
    Replies
    1. Lecturer post? எது என்னவென்றே தெரியாமல் விவாதமா? In lecturer post you can write exams, CV & Interview only in Assistant Professor and associate professor, gothrough UGC website for recruitment process

      Delete
    2. Where it is available? Mention that university we will go and buy

      Delete
  6. somebody told Ph. D got through money. you donot have Ph.D you telling like that, you do Ph.D you know that pain

    ReplyDelete
    Replies
    1. Then why did you do PhD, clear NET/SET exam. Why do you choose PhD? BA. M. A students don't need phd faculty, moreover, phd is not necessary to teach to ug and pg

      Delete
    2. தாங்கள் கூறுவது மிகவும் சரி

      Delete
    3. தாங்கள் கூறுவது மிகவும் சரி

      Delete
    4. சரியான கருத்து

      Delete
  7. Ph.D 90% பேர் காப்பியே.அது எப்படி ஆங்கிலத்தில் நாலு வார்த்தை பேசமுடியாதவர்களு எல்லாம் ஆங்கிலத்தில் Ph.D சென்றார்கள்.நேர்மையாக Ph.D முடித்தவர்களுக்கு நியமனத்தேர்வு ஒன்றும் கடினம் அல்ல.

    ReplyDelete
  8. Ph.D 90% பேர் காப்பியே.அது எப்படி ஆங்கிலத்தில் நாலு வார்த்தை பேசமுடியாதவர்களு எல்லாம் ஆங்கிலத்தில் Ph.D சென்றார்கள்.நேர்மையாக Ph.D முடித்தவர்களுக்கு நியமனத்தேர்வு ஒன்றும் கடினம் அல்ல.

    ReplyDelete
  9. ஐயா நான் 2006லிருந்து ஒரு அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணி புரிந்து வருகிறேன். பேராசிரியர் தகுதித் தேர்வான SETல 2012லயே Pass பண்ணிட்டேன். 2015ல Ph.D முடித்து விட்டேன். இதனால் வரை No College TRB. இதற்குமேல் என்ன தகுதி வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் SET ன் நிலை பாடும், Ph.D ன் வலியும் வேதனையும். நான் நன்கு அறிவேன்.

    ReplyDelete
  10. ஐயா நான் வரலாற்று மாணவி(ஆய்வாளர்)தமிழ்லதான் முனைவர் பட்ட ஆய்வு கட்டுரையை எழுதியுள்ளேன். அதற்காக ஆங்கிலம் தெரியாது என்பது இல்லை. ஒருவர் Ph.D முடித்திருந்தார் என்றால் அவருக்கு ஆங்கிலம் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த முனைவர்களையும் கல்வியாளர்கள் புண்படுத்தாதீர்.

    ReplyDelete
    Replies
    1. ஆண் முனைவர் என்றால் பணம், பெண் முனைவர் என்றால் பணம் அல்லது அது, கொடுக்காவிடில் ஏது Phd.போங்க சார். MPhil. க்கே அதுவும் பணமும் செய்யும் வேலையே தனி

      Delete
    2. நான் ஒரு பெண் தயவுசெய்து தரக்குறைவாக பேசாதீர். எனது ஆய்வு நெறியாளர் கண் தெரியாத மனிதர். என்னுடைய காசில் ஒரு டீ கூட குடித்ததில்லை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் எல்லோரையும் ஒரே மாதிரி எடை போடாதீர்.

      Delete
  11. we the people going to give money (30l or 35l or 40l ) for getting job . we all first be truth . eligible person get better job

    ReplyDelete
  12. கல்வியாளர் தானே நீங்கள் பொதுவான இடத்தில் பொதுவாக கருத்து சொல்லும்போது பெண்களை இழிவுபடுத்துகிறீர். வார்த்தைகள் தெளிவாகவும், சுத்தமாகவும், ஆறுதலாகவும் இருக்கும் என்பதற்காகவே நான் கல்வி செய்தியை பார்ப்பதுண்டு. ஆனால் நான் இன்று பெண் என்ற முறையில் வேதனை படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒரு Dr என்பதை அந்த ஆண் மனிதரால் ஏற்க முடியவில்லை, அதன் பிரதிபலிப்பு தான்...நீங்கள் அரசு வேலை கிடைத்து நலமாகவே இருப்பீர், 10 ஆண்டு கழித்து கல்வி செய்தியை பார்த்தாலும் இவர் இப்படியே விவாதம் செய்து கொண்டே இருப்பார்..

      Delete
    2. மிகவும் சந்தோஷம்.

      Delete
  13. PH.D ,SET,NET என்று அனைத்து தகுதியும் திறமையும் இருக்கு என்று சொல்கிறவர்கள் ஏன் TRB போட்டித் தேர்வு கண்டு பயம் உங்க திறமைையை அதில் காட்டுங்க பார்க்கலாம்.

    ReplyDelete
  14. Engineering college TRB vacancies are filled by exams only. Only SET NET and Ph.D candidates can apply and write the test. There experience marks are also given for this who worked in colleges after qualified..So experience is counted, research is counted, SET/NET is counted. Arts and science college TRB should be filled by exam just like engineering colleges TRB

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர்களே.. என்னுடைய பேராசிரியர் Ph.D மற்றும் NET(8 முறை)&SET தேர்ச்சி பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் 10ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ளார்..அப்படி இருந்தும் அவருக்கு பணி கிடைக்கவில்லை.. தனியார் கல்லூரியில், தன் குடும்பத்திற்காக தன்மானத்தை இழந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்... திறமைக்கு முக்கியத்தும் கொடுப்பதில்லை சில தனியார் கல்லூரிகள் .. மாணவர்களை யார் கல்லூரியில் அதிகம் சேர்க்கின்றரோஅவர்களுக்கு தான் மரியாதை... தேர்வு வைத்தால் எங்கள் பேராசிரியர் நிச்சயம் வெற்றி பெறுவார்...பணம் என்றால் அவரால் கொடுக்க முடியாது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி