ஆடிட்டிங் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பதிவு செய்யலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2020

ஆடிட்டிங் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பதிவு செய்யலாம்.

 


தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, தென்னிந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (எஸ்ஐஆர்சி) ஆகியவை இணைந்து ஆடிட்டிங் எனப்படும் சிஏ அடிப்படைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சியை அளிக்க உள்ளன.

இது தொடர்பாக எஸ்ஐஆர்சி துணைத் தலைவர் கே.ஜலபதி கூறியதாவது:


''இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் ஆடிட்டர் பணிக்காக சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. 2021 மே மாதம் நடைபெறும் சிஏ பவுண்டேசன் தேர்வை எதிர்கொள்ள, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ரூ.9,200 செலுத்த வேண்டும்.

ஐசிஏஐ-ன் போர்ட் ஆஃப் ஸ்டடிஸில் (ICAI-BOS) வரும் ஜனவரி 1-ம் தேதி தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனைத்துப் பாடநூல்களையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போதே சிஏ அடிப்படைத் தேர்வுக்கும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய பிறகு மே மாதத்தில் வரும் சிஏ அடிப்படைத் தேர்வை எழுத வேண்டும். தேர்வு முடிவு வருவதற்குள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிஏ அடிப்படைத் தேர்வுக்கான பாடத்திட்டத்துக்கு  https://eservices.icai.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்கள், சந்தேகங்களை https://www.icai.org/post/faqs-provisional-admission-to-foundation-course என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.


எஸ்ஐஆர்சி துணைத் தலைவர் கே.ஜலபதி

2021-ம் ஆண்டு மே மாதத்தில் சிஏ அடிப்படைத் தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு எஸ்ஐஆர்சி  ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தனியார் பள்ளி மாணவர்கள் ரூ.9,500-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் 2021 ஏப்ரல் 10-ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6.30 மணி முதல் 8.30 வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை என தினமும் 5 மணி நேரம் வகுப்புகள் இருக்கும். பயிற்சி வகுப்புகளுக்கு https://www.sirc-icai.org/view-batches.php என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

இலவசப் பயிற்சி தொடர்பாகக் கூடுதல் விவரங்கள், சந்தேகங்களுக்கு 96771 26011, 82205 22669, 73585 06400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்''.

இவ்வாறு ஜலபதி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி