பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களுடன் கருத்துகேற்பு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை செய்திக் குறிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2020

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களுடன் கருத்துகேற்பு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை செய்திக் குறிப்பு.

 அரசு செய்திக் குறிப்பு :




 தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் கோவிட் 19 நோய்த் தொற்று படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வரும் சூழ்நிலையில் , பெற்றோர்களும் , கல்வியாளர்களும் தமிழகத்தில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை விரைவில் திறந்திட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 


பள்ளிகளை திறப்பது குறித்து மத்திய அரசு , 30.9.2020 அன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15.10.2020 க்கு பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளை மாநில அரசுகள் படிப்படியாக திறக்க அனுமதித்துள்ளது. எனினும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை , சுகாதாரத்துறை மற்றும் தொற்று நோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு , வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறந்திடலாம் அறிவிக்கப்பட்டது . மேலும் , வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் , புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விடுமுறைகள் வருவதை கருத்தில் கொண்டும் , மாணவர்கள் பாடங்களை முழுவதுமாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவோ அல்லது இணையவழி வாயிலாகவோ கற்பது அவர்களுக்கு முழுமையான நிறைவினை அளிக்காது என்பதையும் ஆசிரியர்கள் மூலமாக நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலமாகத்தான் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துக்கொண்டு கற்பதற்கும் , தேர்வினை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது . மத்திய அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி அந்தந்த பள்ளி நிர்வாகத்துடன் என அரசால் கலந்தாலோசித்து பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதன் அடிப்படையிலேயே மாநிலத்தின் வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. 


இருந்தபோதிலும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பள்ளிகள் திறப்பு குறித்து சில கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது . இந்நிலையில் இது குறித்து ஏற்கனவே பெற்றோர்கள் , கல்வியாளர்களின் கருத்துகள் அரசால் பெறப்பட்டு பரிசிலிக்கப்பட்டு இருந்த போதிலும் , மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசுப் பள்ளிகள் , அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும் , தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளை பெற்றிட ஏதுவாக வருகின்ற நவம்பர் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் , கோவிட் 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது . இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் , 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் . கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும்.

1 comment:

  1. I don't want the schools to be opened because the second wave of CORONA has been spreading all over the india. At this time I don't want my children to go school though they are higher secondary class. We need to focus on our children's health care not the education. Obviously education is important but not more than health. If any of my children suffer from CORONA will the principal of their school or the government will answer? Let all this world cure from this disease and let the children and students be safe with their parents at home. Thank you

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி