கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை! - kalviseithi

Nov 11, 2020

கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

பள்ளிக் கல்வித் துறைக்கெதிராக தொடரப்படும் வழக்குகள் மீது காலகெடுவிற்குள் துரித நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் , வழக்குகளைத் தொடர்ந்து கண்காணிக்கத் தவறும் நேர்விலும் துறைக்கு பாதகமாகத் தீர்ப்புகள் பெறப்படுகின்றன. அவ்வாறானத் தீர்ப்புகளின் மீது தொடர்புடைய விதிகளைக் குறிப்பாக சுட்டிக்காட்டி தெளிவாக பேல் முறையீடு , சீராய்வு மற்றும் சிறப்பு விடுப்பு மனு ஆகியவை உடனுக்குடன் தாக்கல் செய்யப்படாமல் நிர்வாக நலனுக்கு முரணாகத் திட்டமிட்டே காலந்தாழ்த்தி தாக்கல் செய்யும் நிலையில் நீதிமன்றங்களால் அவை ஏற்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்படுவதால் பல்வேறு வழக்குகளில் அரசுக்கு வீணான நிதி இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அவ்வாறான திப்புகளை பின் தொடர்ந்து பலரும் வழக்கு தொடர்ந்து ஆளைப் பெறுகின்றனர். இம்மாதிரியான அலட்சியமான செயல்பாடுகளால் அரசளவில் உயர் அலுவலர்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதோ நிர்வாகத்திலும் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. எனவே இனிவரும் காலங்களில் அலுவலர் மற்றும் பணியாளர்களது கவனக் குறைவால் துறைக்குப் பாதகமாக தீர்ப்பாணைகள் பெறப்படும் நேர்வுகளில் தொடர்புடைய வழக்குக்கு ஆகும் செலவினத் தொகையுடன் அரசுக்கு ஏற்படக் கூடிய நிதியிழப்பு முழுவதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்தே பெறப்படும் என்பதுடன் ஒவ்வொரு வழக்கிற்கும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரே முழுப்பொறுப்பாவார்கள் எனவும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. இதில் எவ்வித விளக்கங்களும் ஏற்கப்படமாட்டாது என பள்ளிக்கல்விித்துறை எச்சரித்துள்ளது.
4 comments:

  1. உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கும் தீர்ப்புகளை செயல்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் உடனடியாக சரியான உத்தரவுகளை அதன் கீழுள்ள அதிகாரிகளுக்கு வழங்கினால் எந்தப் பிரச்சினைகளும் எழ வாய்ப்பிருக்காது என்று நம்புகிறேன் .

    ReplyDelete
  2. Pls Part Time teachers ku help panuga

    ReplyDelete
  3. எழுத்துப் பிழைகள் உள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி