தனியார் பள்ளி மாணவன் மனு தள்ளுபடி - kalviseithi

Nov 13, 2020

தனியார் பள்ளி மாணவன் மனு தள்ளுபடி

 மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி இடம் ஒதுக்க கோரிய, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவனின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகாவை சேர்ந்த, சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு:என் மகன் சுரேந்தர், ௮ம் வகுப்பு வரை, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தான். பின், பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்தான். பிளஸ் 2 தேர்வில், 457 மதிப்பெண்; 'நீட்' தேர்வில், 239 மதிப்பெண் எடுத்துள்ளான்.மருத்துவ படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


சதவீத அடிப்படையில் வெளியிடப்பட்ட வரிசைப் பட்டியலில், என் மகன், 54வது வரிசையில் உள்ளான். அரசு பள்ளி மாணவர்கள், 300 பேருக்கு, மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்பதால், என் மகனுக்கு உறுதியாக கிடைக்கும். அவன், 8ம் வகுப்பு வரை, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால், தகுதி சான்றிதழ் கிடைக்கவில்லை. 


கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள ஏதுவாக, தகுதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்க, அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும். மருத்துவ படிப்புக்கு, என் மகனை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, ''அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்துள்ளதால், தகுதி சான்றிதழ் வழங்க முடியாது. அரசு வழங்கும், 7.5 சதவீத ஒதுக்கீடு சலுகையையும் பெற முடியாது,'' என்றார்இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

9 comments:

 1. காசு இருந்தா தனியார் இல்லனா அரசு பள்ளியா

  ReplyDelete
  Replies
  1. TNEB Accountant- Online class and
   STUDY MATERIALS AVAILABLE.
   1. Unit wise study material
   2. Concept wise explanation
   3. Multiple choice questions
   4. Answer with explanation
   5. Total 1046 pages
   Contact : ST.XAVIER'S ACADEMY,
   NAGERCOIL, CELL:8012381919

   Delete
 2. காசு இருந்தா தனியார் இல்லனா அரசு பள்ளியா

  ReplyDelete
 3. காசு இருந்தா தனியார் இல்லனா அரசு பள்ளியா

  ReplyDelete
 4. அரசு உதவிபெறும் பள்ளி என்பதை கல்விசெய்தியே தனியார் பள்ளி என்கிறது

  ReplyDelete
 5. ஆசிரியர்களை அடிமை படுத்தும் பள்ளி நிதிஉதவி பள்ளி, நிதிஉதவி சிறுபான்மையினரின் பள்ளிகளில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீடு இப்பள்ளிகளில் நடைமுறை படுத்துவதில்லை, சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதற்கு எவ்ளோ ஆசை

  ReplyDelete
 6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் முறைகளையும் ஆசிரியர்கள் வழிநடத்தும் முறைகளையும் வைத்துப்பார்க்கும்போது சட்டம் தவறாக பயன்படுத்தபடுவது எல்லோருக்கும் தெளிவாக தெரிகிறது பிறகு ஏன் இந்த பள்ளிகளை அரசு பள்ளியாகவே மாற்றிவிடக்கூடாது

  ReplyDelete
 7. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் அரசு தானே தருகிறது.

  ReplyDelete
 8. இதையும் ஒரு சட்டமாக்குங்கள்..அரசு துறையில் பணியாற்றும் அனைத்து துறையினர் குழந்தைகள் அரசு பள்ளியில் சேத்து தொடர்ந்து படிக்கவைத்தால் மட்டுமே அரசு சம்பளம் வழங்கும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஆசிரியரிடம் குழந்தைகள் படிக்கும் உண்மைதன்மைக்கான சான்று சமர்பிக்க சொல்லுங்களேன் அனைவருக்கும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் கிடைத்திடும்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி