மீன்வளப் பல்கலையில் உதவிப் பேராசிரியர் பணி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2020

மீன்வளப் பல்கலையில் உதவிப் பேராசிரியர் பணி அறிவிப்பு.


நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . பணி : Assistant Professor : 23 இடங்கள் . காலியிடங்கள் உள்ள துறைகள் விவரம் : Aquaculture 7 , Fish Processing Technology - 2 , Fishing Technology and Fisheries Engineering- 3 , Aquatic Environment Management - 3 , Fisheries Biology and Resource Management - 3 , FishPathologyandHealthManagement - 3 , Fisheries Extension - 1 , Fisheries Economics - 1 . தகுதி : B.F.Sc பட்டப்படிப்பை முடித்து சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் குறைந்தது 55 % மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் . மேலும் ஸ்லெட் நெட் தேர்வில் தேர்ச்சி . NASS பத்திரிகையில் ஒரு ஆய்வுக் கட்டுரையாவது வெளியாகியிருக்க வேண்டும் . விண்ணப்பக் கட்டணம் : 12 ஆயிரம் ( எஸ்சி / எஸ்டியினருக்கு ₹ 1000 ) . இதை ' The Finance Officer , Tamilnadu Dr.J.Jayalalitha Fisheries University ' என்ற பெயரில் நாகப்பட்டினத்தில் செலுத்தத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும் . www.tnjfu.ac.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து , விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் . விண்ணப்பத்தை ' The Registrar , Tamilnadu Dr.J.Jayalalitha Fisheries University , Nagapattinam - 611002 . ' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் . விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் : 5.1.2020 .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி