மாணவர்களின் துன்பத்தைப் போக்க உடனடியாகப் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஜனவரி மாதம் முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் வி.பி.சானு, பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
’’பெருந்தொற்றுக் காலத்தில் இருந்து நாடு முழுவதும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் நடைபெற்றாலும் அரசிடம், கல்வி நிறுவனங்களை மீண்டும் முழுமையாகத் திறப்பது குறித்த விரிவான திட்டம் எதுவுமில்லை.
நேரடிக் கற்றல் தடைப்பட்ட சூழலில் ஆன்லைன் மூலம் இணையத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிவேக இணையம், தனி அறை, மேசை உள்ளிட்டவை தேவைப்படக் கூடிய அக்கல்வி எல்லோருக்கும் சாத்தியம் ஆவதில்லை.
லேப்டாப், குறைந்தபட்சம் ஸ்மார்ட்போனைக்கூட வாங்க முடியாத சூழலில், விளிம்புநிலை மாணவர்கள் தங்களுக்கான கற்றல் வாய்ப்பை இழக்கின்றனர். ஸ்மார்ட்போன் வாங்க வழியில்லாமல் நிகழ்ந்த தற்கொலைகளை யாரும் மறக்க முடியாது. அதேபோல குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை இந்தக் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே இத்தனை நாட்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க, ஆன்லைன் கற்பித்தல் செயலிகள் காரணமா என்று கேள்வி எழுகிறது. கல்லூரி மாணவர்களிடையே இறுதி ஆண்டுத் தேர்வுகள் கட்டாயப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டபோது கல்லூரிகளை இன்னும் திறக்காதது ஏன்? தொழிலதிபர்கள் அரசைக் கட்டாயப்படுத்தி மால்களையும், திரையரங்குகளையும் மதுக்கடைகளையும் திறக்க வைக்கும்போது வகுப்பறைகளை ஏன் திறக்கக்கூடாது?
கல்வி நிறுவனங்களை மூடி லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளி, கல்லூரிகளை அரசு திறக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்’’.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்று வரவேகிறேன். 👍👍
ReplyDeleteமக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர்.
கல்வி நிறுவனங்களைத் தவிர அனைத்து தலர்வுகளும் நீக்கப்பட்டன.
வேலை செய்யாமலேயே மாத சம்பளம் கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள் ஆம் அரசு பள்ளி ஆசிரியர்கள் தான்.
👉இதுவே பள்ளி கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கு சரியான சூழல் என்று உலக சுகாதாரம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்னும் கல்வி நிறுவனங்கள் மூட வண்ணமே உள்ளது.
கல்வி நிறுவனங்கள் இன்னும் மூடப்பட்டிருந்தால் மேலும் மாணவர்கள் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி விகிதம் தர வந்தால் அவர்களில் யார் முதல் மாணவன் யார் பின்தங்கிய மாணவன் என்பதை அடையாளம் காணாமல் போய்விடும் அதில் மாணவர்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. நன்றாகப் படிக்கும் மாணவன் எவன் நன்றாக படிக்காத மாணவர் என்பதே அர்த்தமற்றுப் போய்விடும் . இது எதிர்கால வேலைவாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் தரவரிசை பட்டியலில் இது சிரமத்தை உண்டாக்கும்.
கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்காமலேயே இருந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும்.
ஏழை மாணவர்கள் ஊட்டச்சத்து குறையும். குழந்தைகள் தொழிலாளர் அதிகரிக்கக்கூடும்.
👉நன்றாக கவனியுங்கள் அனைத்து மக்களும் தங்களது இயல்பான நிலைக்குத் திரும்பி விட்டனர் .
ஏன் ரயில் நிலையங்களிலும் அல்லது பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டமாகச் செல்லும் பொழுது தொற்று உண்டாகாதா ?
சினிமா தியேட்டர்களில் மக்கள் கூட்டமாக சென்று படம் பார்க்கும் பொழுது
டாஸ்மார்க் கடையில் நீண்ட வரிசைகளில் நின்று மது வாங்கும் மக்களுக்கு தொற்று பரவாதா ?
சந்தைகளில் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கும் மக்களுக்கு ஒருநாள் தொற்று பரவாதா?
இங்கெல்லாம் கூட்டம் கூட்டமாக செல்லும் மக்களுக்கு தொற்று பரவாது என்றால் எவ்வாறு பள்ளிகளில் மட்டும் தொற்று பரவும் ?
🙏இனியும் பள்ளி கல்லூரி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தால்
எதிர்கால கல்வி பிரச்சனையை உண்டாகக்கூடும்.
Unknown முட்டாள்
ReplyDeleteநண்பரே.. உங்களின் கருத்தை பதிவிடுங்கள். மற்றவரை தரக்குறைவாக பேசுவது என்ன நியாயம்..
Deleteபள்ளிகள் திறக்காமல் இருப்பது அடுத்த கல்வி ஆண்டுமுதல் புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்தவா? என்பது ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது எனவே மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று நினைக்காமல் வருகின்ற தேர்தல் எல்லா வினாக்களுக்கும் விடையளிக்குமா? புத்தர் கூறியது போல எல்லாம் மாற்றத்திற்குறியது மாற்றம் ஒன்றே நிலையானது பொறுந்திருந்து பார்ப்போம்
ReplyDeleteபுதிய கல்விகொள்கை அடுத்த ஆண்டு வர தான் போகிறது... இதெல்லன்ன சந்தேகம்.. அதற்கும் இன்றைய சூழலுக்கும் என்ன சம்பந்தம்... உலகமே அடங்கி இருக்கிறது...
Deleteநானும் தனியார் பள்ளி ஆசிரியர் தான், பாதி சம்பளத்திற்கு குறைவு தான் இப்பொழுது கிடைக்கிறது. ஆனால் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும்,
அவர்கள் மூலம் பெரும்தொற்று விரைவில் பரவி விடும், ஒருவனுக்கு தொற்று இருந்தால். ஐஐடி மெட்ராஸில் என்ன நடந்தது... 80 பேருக்கு மேல் பரவி விட்டது.. அங்கு இருக்கும் சூழல் கண்டிப்பாக சாதாரண அரசு பள்ளியில் இருக்குமா
இந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்.
ReplyDeleteதிறந்தாள் எதிர்ப்பது திறக்கா விட்டால் திறக்க சொல்லி போராட வேண்டியது. நல்ல policy keep it.
ReplyDelete10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காவது அவசியம் பள்ளிகளை திறக்க வேண்டும்...... முதலில் மூடப்பட்டு இன்னும் திறக்காதது பள்ளிகள் mattume....
ReplyDeleteVoemma koodila 10 paer
Delete