தேர்தலுக்கு முன்பே பள்ளி இறுதி தேர்வா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2020

தேர்தலுக்கு முன்பே பள்ளி இறுதி தேர்வா?

 


'சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:தை பொங்கல் பரிசாக, 2,500 ரூபாயை, அரசு உங்களுக்கு தருகிறது. தமிழகத்தில் இன்னும் பல திட்டங்கள் உங்களை நோக்கி வரப்போகிறது. நீங்கள் பார்த்து கொண்டே இருங்கள். இந்த அரசு இன்னும் மக்களுக்காக என்னென்ன செய்யப்போகிறது என்று.சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என்பது குறித்து, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம். ஆனால், இன்னும் அதுகுறித்து எந்த முடிவுகளும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

5 comments:

  1. நகைச்சுவை ஒருநாள் கூட ஆசிரியரை மாணவன் சந்திக்கவில்லை தேர்வு என்றால் மிகவும் சிரிப்பாக இருக்குது அமைச்சர் சார்

    ReplyDelete
  2. Ungalku enna students patha apdi irku..yaru students teacher thareyathu ana exam mattum super...

    ReplyDelete
  3. ஆமா... ஆமா... நீங்க பத்து வருஷமா செஞ்ச எல்லாத்தையும் நாங்க பார்த்து கொண்டுதான் இருக்கோம். தேர்தல் எப்ப வரும்னு காத்துக்கிட்டு தான் இருக்கோம்...உங்கள வச்சு செய்ய.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி