உருவானது புரெவி புயல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2020

உருவானது புரெவி புயல்! வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புரெவி புயலாக உருவானது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. தென் கிழக்கு, தென் மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயலுக்கு புரெவி என்று பெயர் சூட்டப்பட்டது.


இந்நிலையில், வங்ககடலில் நிலை கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புரெவி புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை திருகோணமலை அருகே 400 கி.மீ. தொலைவில் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் புரெவி புயல் நிலைக்கொண்டுள்ளது. புயல் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக நாளை 2-ம் தேதி திருகோணமலையை கடக்கிறது. அதன் தொடர்ச்சியாக 4-ம் தேதி கன்னியாகுமரி-பாம்பன் இடையே புரெவி புயல் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய கூடும் என்றும், காற்றும் வேகமாக வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த புயலால் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள 134 தீயணைப்பு வீரர்கள் தவிர மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி