வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் நீட்டிப்பு. - kalviseithi

Dec 31, 2020

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் நீட்டிப்பு.

 


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. வருமான வரிச்சட்டம் பிரிவு 139ன் படி, 2019-20 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான  வரிக்கணக்கை, 2020 மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, இதற்கான அவகாசம் முதலில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூலை 31, செப்டம்பர் 30, நவம்பர் 30ம்  தேதி, அதன் பிறகு டிசம்பர் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டது. 


இந்த அவகாசம் நாளையுடன் முடிந்த நிலையில், 6-வது முறையாக அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதில், ‘கொரோனா பரவலால் வருமான வரி செலுத்துவோர் எதிர் கொண்டுள்ள இடர்பாடுகளை  கருத்தில் கொண்டு, 2019-20 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிப்புச் செய்யப்படுகிறது,’ என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி