பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என்று அரசு அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2020

பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என்று அரசு அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

 


தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்த லைவர் இளமாறன் விடுத்துள்ள அறிக்கை : கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மாணவர்க ளின் நலன் கருதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது . இதன்படி , 9 ம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்களையும் , 10 , 11 , 12 ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்களையும் குறைக்கும் அறிவிப்பு வர வேற்புக்குரியது . தற்போது பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் எந்தெந்தப் பாடங்கள் குறைக்கப்படும் என்பதறியாது மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர் . அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் குறைக் கப்பட்ட பாடப்பகுதி விவரங்களை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் . குறைந்தபட்சம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காவது வெளியிட வேண்டும் . பாடப்பகுதி இவைதான் எனச் சொல்லாததால் படிப்பில் ஆர்வம் குறையும் . பொதுத் தேர்வுக்குரிய மாணவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் பாடப் பகுதி இவைதானென்று அறிவித்திடச் செய்யும்படி கல்வித் துறை அமைச்சரை வலியுறுத்துகிறோம் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

3 comments:

  1. Don't open school till corona fully cleated

    ReplyDelete
  2. Don't open school till corona fully cleated

    ReplyDelete
  3. We oppose government order.. they should be close the schools till corona fully went over..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி