வேலைவாய்ப்புப் பயிற்சியுடன் இணைந்த பட்டப் படிப்புகளை ஊக்கப்படுத்துங்கள்: அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு. - kalviseithi

Dec 9, 2020

வேலைவாய்ப்புப் பயிற்சியுடன் இணைந்த பட்டப் படிப்புகளை ஊக்கப்படுத்துங்கள்: அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு.

 

உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சியுடன் இணைந்த பட்டப் படிப்புகளை ஊக்கப்படுத்துங்கள் என்று அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி கடிதம் அனுப்பியுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''தொழில்துறையினரின் தேவைக்கு ஏற்ப, வேலைக்கான முன்பயிற்சிகளைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புக்கும் வேலை கிடைப்பதற்கான திறனுக்கும் உள்ள இடைவெளி நீக்கப்படும். பொதுவான பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்களுக்கும் நிறுவனங்களின் தேவைக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பட்டப் படிப்புகளுக்கான திட்டங்களில் திறம்பட மறுவடிவமைப்பை மேற்கொள்ள வேண்டும். தொழில் துறைக்கும் சேவைத் துறைக்கும் ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

இதில் வேலைவாய்ப்பு சார் பயிற்சிகள் (Apprenticeship/ internship) முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிஜமான பணிச் சூழலில் பணியாற்ற உதவும் வகையில் கட்டமைக்கப்பட்ட பயிற்சி வடிவங்களே இவை''.

இவ்வாறு யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள 18 பக்க வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்க்க: https://www.ugc.ac.in/pdfnews/9105852_ugc-guidelines_ApprenticeshipInternship.pdf

2 comments:

  1. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றால் 40 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் பணி வாய்ப்பு நிச்சயம்.இந்த நடைமுறையைத் தேர்தல் அறிக்கையில் கூறும் அரசே தேர்தலில் வெற்றி பெறும்.

    ReplyDelete
  2. நண்பர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து நமது கல்வி அமைச்சர் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் அந்த தொகுதியில் பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அவரை விட அவரை எதிர்த்து போட்டியிடும் மற்ற சுயேச்சை வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம் தயவு செய்து இதற்கு தவறான பதிவுகள் வேண்டாம் ஏனென்றால் பாதிக்கப்பட்ட அனைத்து கல்வியாளர்களும் மிகவும் அவதிப் பட்டுள்ளனர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி