பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2020

பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு

 


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நிரப்பிட சென்னை பழங்குடியினர் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.


மேலணை, பாபநாசம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - 1 மற்றும் இடைநிலை பணியிடம் - 1 காலியாக உள்ளது. இந்த பணியிடங்களில் பழங்குடியினர் இன பட்டதாரி ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.9,000- ஊதியத்திலும், பழங்குடியினர் இன இடைநிலை ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.8,000 ஊதியத்திலும் 10 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்த தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் வரும் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பழங்குடியினர் நல அலுவலகத்தை உரிய அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் தொடர்பு கொள்ளலாம். பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சென்னை பழங்குடியினர் நல இயக்குநரால் தேர்வு, நேர்காணல் மற்றும் மாதிரி வகுப்பு நடத்தப்படும். இத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர பணிநியமனம் செய்ய உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் செயலுறுத்தும் நீதிப்பேராணை வழக்கு உயர்நீதிமன்றத்தில் போட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Nathiya sister any news about GO 165😭😭😭

      Delete
    2. உபரி ஆசிரியர்களை பற்றிய அரசாணையை கேட்கிறீர்களா? நமக்கு ஏற்கனவே பற்றாக்குறை பணியிடங்கள் தான் இருக்கிறது.அதனால் தான் தற்காலிக நியமன அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

      Delete
    3. Ohh, in govt school filled with temporary tr but govt aided school how can filled(regular post)

      Delete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு (தற்காலிக அல்லது நிரந்தர) பணியிடங்கள் நிரப்பினால் தானே 'தகுதி'யான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைப்பார்கள். 'டெட்' தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமித்து பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கையில் அரசு விளையாடுவது சரியா...?

    ReplyDelete
    Replies
    1. Sir,
      Just contact to this number 8270730432.
      2017 ST -TET passed candidates

      Delete
  3. இதற்கு உடனடியாக நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நமது உரிமை பறிக்கப்படும்.நம் தமிழ்நாடு அரசாங்கம் நம்மை ஒரு தூசி போல் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies

    1. அனைவரும் போராட வேண்டும்

      Delete
    2. Protest is waste. We will file the case. Because the government will response only the case

      Delete
  4. Part time teachers ku help pannatheenga. Avanuga savattum

    ReplyDelete
  5. I am also 2017 Tet botany 9025999268

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி