கற்போம் எழுதுவோம் இயக்கம் " - TN EMIS கைபேசி வாயிலாக கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் மைய வருகை விவரம் 31.12.2020 க்குள் முழுமையாக மேற்கொள்ள இயக்குநர் அறிவுறுத்துதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2020

கற்போம் எழுதுவோம் இயக்கம் " - TN EMIS கைபேசி வாயிலாக கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் மைய வருகை விவரம் 31.12.2020 க்குள் முழுமையாக மேற்கொள்ள இயக்குநர் அறிவுறுத்துதல்.


மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிக்காட்டுதல்களின்படி , “ கற்போம் எழுதுவோம் இயக்கம் ” - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 30.11.2020 முதல் கற்போர் மையங்கள் ( Leaners Literacy Centers ) துவங்கப்பட்டு முதற்கட்டமாக , ஒவ்வொரு கற்போர் மையத்திற்கும் குறைந்த பட்சம் 20 கற்போர்களை இலக்காகக் கொண்டு அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களின் வாயிலாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . sgta group இந்நிலையில் , கற்போர் மையச் செயல்பாடுகள் , தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் வருகை விவரங்களை TN - EMIS கைபேசி செயலியில் முழுமையாக பதிவேற்றம் செய்திடும் பொருட்டு உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வை ( 2 ) - இல் காணும் இவ்வியக்கக கடிதத்தின்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து இணைப்பில் கண்டுள்ள 29.12.2020 அன்றைய TN - EMIS அறிக்கையின்படி கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகை பதிவு விவரங்கள் TN - EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பெறப்பட்டுள்ளது . TN - EMIS வலைதளத்தில் முன்குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் TN - EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலர் , வட்டாரக் கல்வி அலுவலர் , வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொ ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் என அனைத்து அலுவலர்களும் கண்காணித்திடும் வகையில் வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது . எனவே , மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகை பதிவு விவரங்கள் TN - EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலர் , வட்டாரக் கல்வி அலுவலர் , வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஆகிய அனைத்து அலுவலர்கள் நிலையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு முன்குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் TN - EMIS கைபேசி செயலியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மையங்களிலும் எவ்வித விடுதலின்றி 31.12.2020 க்குள் முழுமையாக பதிவேற்றம் செய்திடும் பொருட்டு உரிய தொடர்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி