அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்றுநர் பணி வரும் 29 - க்குள் விண்ணப்பிக்கலாம். - kalviseithi

Jan 28, 2021

அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்றுநர் பணி வரும் 29 - க்குள் விண்ணப்பிக்கலாம்.

 


அம்பத்தூர் அரசு ஐடிஐயில் காலியாக உள்ள தற்காலிக பயிற்றுநர் பணிக்கு தகுதியானோர் வரும் 29 - ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இப்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன் பிரிவில் பயிற்றுநர் பணியிடம் காலியாக உள்ளது . இப்பணி பொது மற்றும் தனிநபர் கூட்டமைப்பு திட்டம் மூலம் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பணியாக நிரப்பப்பட உள்ளது . இதற்கு குறிப்பிட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்று ஓர் ஆண்டு அனுபவம் அவசியம் . அத்துடன் , எஸ் . சி . ( அருந்ததியர் ) 21 வயதுக்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும் , இப்பணி 11 மாத ஒப்பந்த காலத்துக்கு மாதந்தோறும் ரூ .14 ஆயிரம் வழங்கப்படும் . இப்பணிக்கு வரும் 29 - ஆம் தேதிக்குள் உரிய சான் றுகளுடன் விண்ணப்பிக்கலாம் . இது குறித்து அரசு ஐ.டி.ஐ.யின் துணை இயக்குநர் மற்றும் முதல்வர் நேரிலோ அல்லது 044-26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் .

1 comment:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி