பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை கூட்டம் 8.01.2021வரை நடத்திட இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2021

பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை கூட்டம் 8.01.2021வரை நடத்திட இயக்குநரின் செயல்முறைகள்.

 


தமிழ்நாடுபள்ளிக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள் , சென்னை 6 ந.கஎண் : 34462 / பிடி 1 / இ 1 / 2020 நாள் 04.01.2021 பொருள் : பள்ளிக்கல்வி - அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் - பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்ந்த அறிவுரைகள் - சார்பு பார்வை : பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் . 34462 / பிடி 1 / இ 1 / 2020 நாள் .4.11.2020 தமிழக அரசு அறிவித்ததற்கிணங்க நவம்பர் 16 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பெற்றோர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தற்காலிகமாக பள்ளி திறப்பது தள்ளிவைக்கப்பட்டது . தற்போது 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விநலன் கருதி பொதுதேர்வு எதிர்கொள்ள ஏதுவாக மாணவர்களை தயார் செய்யவேண்டும் என்பதால் , பள்ளி திறந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பிப்பது இன்றியமையாதது ஆகும் . எனவே 08.01.2021 வரை அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் இத்துடன் இணைக்கப்பபட்டுள்ள COVID - 19 க்கான வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பது சார்ந்து கருத்துகேட்பு கூட்டம் பள்ளிகளின் வசதிக்கேற்ப நடத்தப்பட வேண்டும் என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Click here to download pdf

2 comments:

  1. Please don't open school of vaccine, This new viruses it's too dangerous for school student. Kindly please use vaccine after that Government will consider to open.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி