இனி முதுகலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு; ஓராண்டு எல்எல்எம் இல்லை - kalviseithi

Jan 9, 2021

இனி முதுகலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு; ஓராண்டு எல்எல்எம் இல்லை

 


முதுகலை சட்டப் படிப்புக்குத் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் ஓராண்டு முதுகலை சட்டப்படிப்பு வருங்காலத்தில் நீக்கப்படும் என்றும் இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி விதிகள் 2020-ன் படி, முதுகலை சட்டப் படிப்புக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு (PGCETL) நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், இத்தேர்வை இந்திய பார் கவுன்சில்  அறிமுகப்படுத்தும் வரை, அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பழைய நடைமுறையே அமலில் இருக்கும். நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்பட்ட உடன், முதுகலை சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை, தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.


அதேபோல இந்தியாவில் ஓராண்டு முதுகலை சட்டப் படிப்பு (எல்எல்எம்) நீக்கப்பட உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் இந்தப் படிப்பை பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் புதிய சட்ட விதிகள் அனைத்துக் கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தி முடிக்கப்பட அடுத்த கல்வியாண்டு ஆகும். அதற்குப் பிறகு நாடு முழுவதும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஓராண்டு முதுகலை சட்டப்படிப்பு இருக்காது.

அதேபோல முதுகலை சட்டப் படிப்புகள் இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட உள்ளன. இனி இப்படிப்புகளுக்கு 4 செமஸ்டர்கள் மட்டுமே நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி