மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலை கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் - kalviseithi

Jan 25, 2021

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலை கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

 

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை  அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


இதற்கிடையே சென்னை,சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பள்ளி வளாகம் மூடப்பட்டது.

இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை பள்ளி தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை  அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நுழைவு வாயிலிலேயே வெப்பமானி வாயிலாக உடல் வெப்பநிலை தினமும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதில் ஏதேனும் மாறுபாடு கண்டறியப்பட்டால் உடனே ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ ஆக்சிஜன் அளவை அளவிட வேண்டும். இவ்விரு சோதனைகளிலும் சராசரியை விட வித்தியாசம் காணப்பட்டால் அவர்களை உடனே தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா சோதனை மேற்கொள்வது அவசியமாகும்” என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி