முக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் - ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்! - kalviseithi

Jan 18, 2021

முக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் - ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்!

 

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் என ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன.19) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.  இதற்கிடையே தாமதமாக நிகழ் கல்வியாண்டு தொடங்கியதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 45 சதவீதம் வரையும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதற்கான பணிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆா்டி) மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பாடவாரியாக நீக்கப்பட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன.  


இதுகுறித்து எஸ்சிஇஆா்டி இயக்குநா் என்.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த்தொற்று  மற்றும் கல்வியாண்டு தாமதத்தை கருத்தில் கொண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள், பாடவாரியாக  அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


அதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள முக்கியமான பாடங்களுக்கு மட்டும் ஆசிரியா்கள் முன்னுரிமை அளித்து முதலில் நடத்த வேண்டும். அதன்பின் நேரம் இருந்தால் எஞ்சிய பாடங்களை நடத்திக் கொள்ளலாம்.


மேலும், நுழைவு மற்றும் போட்டித்தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் அந்தந்தத் தோ்வுக்கு ஏற்றபடி முழு பாடத்திட்டத்தையும் படிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலை பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும்  தெரிவித்து உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


அதே நேரம், சிபிஎஸ்இ,  ஐசிஎஸ்இ பாட திட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை போன்று எத்தனை சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஒவ்வொரு பாடத்திலும் முழுமையாக சில பகுதிகளை நீக்காமல், அவற்றில் தேவையில்லாத சில பிரிவுகளே நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவா்கள் அனைத்து பகுதிகள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். மேலும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத் தோ்வுக்கான வினாக்களைத் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.

3 comments:

 1. Irrukira four month la part time teacher ellarumay risk eduthu nalla marks koduka veandum .. cirucular 241/21..by part time teacher association..

  ReplyDelete
 2. பகுதிநேர ஆசிரியர்கள் வேலை என்னவென்றால், மாணவர்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா என்றும், மேலும் அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யவும், சனிடைசர் போட மட்டும்தான் பகுதிநேர ஆசிரியர்கள் வேலை மேற்கூறிய வேலைகளை சரியாக செய்தாலே மாணவர்கள் நல்ல மன நிறைவோடு படித்து முழு மதிப்பெண்கள் பெறுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Kandipa sariyanga pannuvom same time teaching pannuvom...ada lusu payalay Mani naga three days partha adutha three days full time teacher Tha da parka veandum brain illadhavanay..

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி