TRB மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தனியே பணிவரன்முறை செய்ய வேண்டியதில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 29.01.2021. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2021

TRB மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தனியே பணிவரன்முறை செய்ய வேண்டியதில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 29.01.2021.

 

தொடக்கக் கல்வித் துறையில் 2009-10ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட (15.09.2010ல் பணியில் சேர்ந்தவர்கள்) ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 29.01.2021.


என 2009-2010ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணிதம் , அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு பார்வை -3 ல் காண் செயல்முறைகள் மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது . 2008-2009 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை ஏற்கனவே பார்வை -2 ல் காண் செயல்முறைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே , 2009-2010 ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தனியே பணிவரன்முறை செய்ய வேண்டியதில்லை. மேலும் , தற்காலிக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும் நியமனங்களுக்கும் , நீதிமன்ற வழக்குகள் மற்றும் வேறு சில நிர்வாகக் காரணங்களுக்காக வழங்கப்படும் நியமனங்களுக்கும் தனியே பணிவரன்முறை செய்யப்பட வேண்டும்.


 இச்செயல்முறைகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் , வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைப்பதோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் உரிய பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்செயல்முறையினை பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது



3 comments:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete
  2. Part time teacher conform Panna matranga y edhvdhu oru reason... engaluku GO potapinbu tha exam we must nu vandhuchu appudi ean engaluku conform pannala

    ReplyDelete
  3. ஒரு லூசு பய இந்த மாதம் இறுதியில் ஏதோ வருதுன்னு பத்து நாளைக்கு முன்னாடி சொன்னா மாதமே முடிஞ்சிருச்சு ஒரு எழவும் வரல நாலு வருஷமா வருது வருதுன்னு தான் சொல்றானுங்க நான் கல்யாணம் பண்ணி புள்ள பெத்து அது பள்ளிக்கூடத்துக்கு போச்சு ஆனா எனக்கு ஒன்னும் வாத்தியார் வேலை கிடைக்கல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி