10, 11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அறிவித்ததால் பொதுத்தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்குமா? மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2021

10, 11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அறிவித்ததால் பொதுத்தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்குமா? மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு!

 


தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் செலுத்திய பொதுத்தேர்வு கட்டணத்தை கல்வித்துறை திரும்ப வழங்குமா என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. 11, 12ம் வகுப்புகளுக்கு விடுபட்ட பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10, 12ம் வகுப்புகளுக்கும், பின்னர் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் சமூக இடைவெளியுடன் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.


10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அரசு திடீரென அறிவித்தது. இது மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், நன்றாக பயிலும் மாணவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனிடையே தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணத்தை அரசு வசூலித்தது. 


10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.115ம், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.175ம், செய்முறை தேர்வையும் சேர்த்து எழுதும் மாணவர்களுக்கு ரூ.225ம் தேர்வு கட்டணமாக வசூல் செய்தனர். தற்போது 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனவே அரசு ஏற்கனவே வசூலித்த ேதர்வு கட்டணங்களை மாணவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இந்த கட்டணத்தை அரசு திருப்பி தர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

4 comments:

  1. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  2. Appadiye lakh kanakula kati irukanuga return pananuma

    ReplyDelete
  3. எதற்காக தேர்வுக் கட்டணம் வசூல் என்றால் , ேர்வு நடந்திருந்தால் ஹால் சூப்பர் விஷன் டூட்டி பார்க்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பஞ்சப்படி பயணப்படி வழங்கத்தான். 10, 11 க்கு ேர்வு முறையாக நடந்திருந்தால், தனியார்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு டூட்டி பார்த்ததற்கு தோராயமாக ரூ 1500 கிடைத்திருக்கும். இப்போது அது வராது. 1500 ரூபாய் என்பது தற்போது தனியார்ப் பள்ளி ஆசிரியருக்கு பெரிய தொகை. ஒரு மாத மளிகை செலவையே சமாளிக்கலாம். நியாயமான அரசு தான் தனியார்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு இழப்பீட்டு தொகையாக எதையாவது தர வேண்டும். அரசு அதைச் செய்யுமா ? வந்தவரை லாபம் என்று சட்டைப் பையை நிரப்பிக் கொள்ளும் வழக்கம் போல.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி