TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி - kalviseithi

Feb 28, 2021

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி

 


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2017ல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 1,33,568 பேர் தேர்வு எழுதினர். முடிவுகள் வெளியாகி சுமார் 2,110 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். பின்னர் இத்தேர்வில் 196 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட 196 பேரும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. 


தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்ற தகுதியானவர்களை நியமிக்க கோரியும் பலர் ஐகோர்ட்டில் வழக்கு ெதாடர்ந்தனர். இதில், தேர்வு ரத்து செய்யப்பட்டது சரி என ஐகோர்ட் உத்தரவிட்டது.


இதை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில், ஐகோர்ட்டின் உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம், மனுதாரர் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட ஐகோர்ட்ைட அணுகி நிவாரணம் பெறலாம் என கூறியது. இதையடுத்து தேர்வில் கலந்து கொண்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். அதில், தேர்வை ரத்து செய்தது தவறு என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கூறியிருந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி, முறைகேடு நடந்ததால் தேர்வை ரத்து செய்தது சரிதான் என தீர்ப்பளித்தார்.


 இதை எதிர்த்து பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 2017ல் நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை. தேர்வில் பங்கேற்ற யாருக்காகவும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

8 comments:

  1. அடுத்த govtவாது எக்ஸாம் நேர்மையா நடத்தட்டும்...
    Trb & tnpsc நேர்மையா நடத்தி போஸ்டிங் போடாத இந்த ஆட்சி இதோடு முடிய வேண்டும் 😡😡😡

    ReplyDelete
    Replies
    1. அரசுசாரா ஆசிரியர்கள் வாழ்வில் மண் அள்ளிப் போட்டதற்கும் சேர்த்து சொல்லுங்கள்.

      Delete
  2. 1. நியமன தேர்வுகளில் குளறுபடி
    2. ஊழல் லஞ்சம்
    3. தெரிவு முறையில் தெளிவற்ற நடைமுறை
    4. தேர்வே நடத்தாமல் விண்ணப்பதாரர் வயது வரம்பை குறைத்து வாய்ப்பு மறுத்தது
    5. ஓய்வு பெறும் வயதை உயர்த்தி இளையோர் பணி வாய்ப்பை சிதைத்தது

    ஆளுங்கட்சி வீழ வீழ்த்த காரணங்கள் போதுமா?

    ReplyDelete
  3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  4. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  5. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  6. www.apexcareacademy.com

    Pg trb Physics

    Online class and test

    Admission going on

    Mb 8807432425

    ReplyDelete
  7. PG TRB CHEMISTRY CLASSES GOING ON AT NAGERCOIL. SUNDAY 10AM - 5PM
    FURTHUR CLARIFICATION CONTACT TO 9884678645

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி