தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் செலுத்திய பொதுத்தேர்வு கட்டணத்தை கல்வித்துறை திரும்ப வழங்குமா என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. 11, 12ம் வகுப்புகளுக்கு விடுபட்ட பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10, 12ம் வகுப்புகளுக்கும், பின்னர் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் சமூக இடைவெளியுடன் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அரசு திடீரென அறிவித்தது. இது மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், நன்றாக பயிலும் மாணவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனிடையே தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணத்தை அரசு வசூலித்தது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.115ம், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.175ம், செய்முறை தேர்வையும் சேர்த்து எழுதும் மாணவர்களுக்கு ரூ.225ம் தேர்வு கட்டணமாக வசூல் செய்தனர். தற்போது 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனவே அரசு ஏற்கனவே வசூலித்த ேதர்வு கட்டணங்களை மாணவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இந்த கட்டணத்தை அரசு திருப்பி தர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
PG TRB 2021
ReplyDeleteALL SUBJECTS COACHING
Each Subject Handling By 3 Efficient Faculties
contact:9976986679, 6380727953
Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.
ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science
இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.
REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES
Hostel Available
For Admission:9976986679, 6380727953
Erode Magic Plus Coaching Centre, ERODE-1.
ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.
All pass 12th also
ReplyDeleteAppadiye lakh kanakula kati irukanuga return pananuma
ReplyDeleteஎதற்காக தேர்வுக் கட்டணம் வசூல் என்றால் , ேர்வு நடந்திருந்தால் ஹால் சூப்பர் விஷன் டூட்டி பார்க்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பஞ்சப்படி பயணப்படி வழங்கத்தான். 10, 11 க்கு ேர்வு முறையாக நடந்திருந்தால், தனியார்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு டூட்டி பார்த்ததற்கு தோராயமாக ரூ 1500 கிடைத்திருக்கும். இப்போது அது வராது. 1500 ரூபாய் என்பது தற்போது தனியார்ப் பள்ளி ஆசிரியருக்கு பெரிய தொகை. ஒரு மாத மளிகை செலவையே சமாளிக்கலாம். நியாயமான அரசு தான் தனியார்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு இழப்பீட்டு தொகையாக எதையாவது தர வேண்டும். அரசு அதைச் செய்யுமா ? வந்தவரை லாபம் என்று சட்டைப் பையை நிரப்பிக் கொள்ளும் வழக்கம் போல.
ReplyDelete