+2 தனித்தேர்வர்கள் - பொதுத்தேர்வுக்கான அறிவுரைகள் மற்றும் பழைய பாடத்திட்டத்துக்கு இணையான புதிய பாடத்திட்ட பகுதிகள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2021

+2 தனித்தேர்வர்கள் - பொதுத்தேர்வுக்கான அறிவுரைகள் மற்றும் பழைய பாடத்திட்டத்துக்கு இணையான புதிய பாடத்திட்ட பகுதிகள் :

 


நடைபெறவிருக்கும் மே 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத ஆன் - லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கு 26.02.2021 பிற்பகல் முதல் 06.03.2021 வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு ( Service centres ) நேரில் சென்று விண்ணப்பிக்கவேண்டும் எனவும் , மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் , சிறப்பு அனுமதித் திட்டத்தில் 08.03.2021 மற்றும் 09.03.2021 ஆகிய தேதிகளில் ஆன் - லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் சேவை மையங்களுக்கு 26.02.2021 முதல் வருகைபுரிவார்கள். அவ்வாறு வருகைபுரிவோருக்கு கீழ்க்கண்டவாறு ஆன் - லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தங்களது ஆளுகைக்குட்பட்ட சேவை மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தி , பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க ( Service Centres ) அறிவுறுத்துமாறு அனைத்து தன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1. 26.02.2021 முதல் தேர்வர்கள் சேவை மையங்களுக்கு வருகைபுரிவார்கள். அவ்வாறு வருகைபுரிவோரிடம் உரிய ஆவணங்களைப் பெற்று சேவை மையங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- ஐ கொண்டு ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2. www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , Click here to access Online Portal for School and Educational Offices என்ற வாசகத்தினை click செய்த பின்னர் திரையில் தோன்றும் HSE PRIVATE APPLICATION என்ற தலைப்பின் கீழ் இடம் பெற்றிருக்கும் சேவை மையங்கள் எவ்வாறு விண்ணப்பங்களைப் பெற வேண்டுமென்பதற்கான அறிவுரைகள் மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


+2 Private Candidates Instructions - Download here

1 comment:

  1. M.P.C PG TRB Coaching center for Mathematics - Erode
    # Classes going on
    # Sunday 10 A.M to 5 P.M
    # 100% result oriented test schedule
    # Online coaching ( Evening 6 to 9 )
    # For details 9042071667
    Demo class
    https://youtu.be/PGj1xhlkwvA

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி