திட்டமிட்டபடி 9, 11ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: அமைச்சா் - kalviseithi

Feb 8, 2021

திட்டமிட்டபடி 9, 11ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: அமைச்சா்

 


திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை (பிப்ரவரி 8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய அதிமுக அலுவலகத்தை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா கிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தனா்.


இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: ஏற்கெனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் செய்ய முடியாது. திட்டமிட்டபடி திங்கள்கிழமை (பிப்ரவரி 8) 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும். மீதமுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றாா்.


இதையடுத்து சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தனியாா் திருமண மண்டபம் திறப்பு விழாவில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனா்.

5 comments:

 1. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
  இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஆட்சியும் இனி இறுதி நிலைக்கு வந்து விட்டது

   Delete
 2. 1 to 8th ku school open panni tet passed candidates ku posting podungada naayingalaaaaa.... Sengotta mairaaaaan.....

  ReplyDelete
 3. மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களே TNTET 2013 pass ஆன ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றால் சட்ட மன்றம் கூடிய சட்ட மாற்றம் கொண்டு வர பட‌ வேண்டும் அதாவது துணை தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் பிறகுதான் பணிநியமனம் செய்ய இயலும் இதுதான் ஒரே வழி

  ReplyDelete
 4. இந்த அரசு, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துள்ளது.... தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தான் வேலைக்கு வரவேண்டும் என்று கொண்டு வந்தார்கள். அதில் தேர்ச்சி பெற்ற பின்பு 40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை இல்லை என்ற ஆணையை வெளியிட்டுள்ளார்கள்.... 7 ஆண்டுகளாக வேலையில்லாமல் செய்துவிட்டு இப்போது 40 வயதைக் கடக்க வைத்து வேலையில்லை என்கிறார்கள்... கேட்டால் வயது அதிகம் ஆகியதால் சரியாக வேலை செய்யமாட்டார்கள் என்கிறார்கள்... விரைவில்... விரைவில்... என்று கூறி வடை சுடும் இவர்கள் திறம்பட கல்வித்துறையை கொண்டுசெல்கிறார்களா?... சீனியாரிட்டி வேலையை ஒழித்தார்கள்... தகுதித்தேர்விலும் வேலைவாய்ப்பையும் ஒழித்துவிட்டார்கள். 40 வயதைக் கடந்தவர்களுக்கும் வேலையை ஒழிக்கிறார்கள்.. இதைப் பார்த்து யாராவது பொங்குகிறோமா????? பகுதி நேர ஆசிரியர்களை மட்டும் பார்த்து பொங்குகிறோம்?? உங்களுக்கானதை கேட்டாலும் கிடைக்காத இந்த ஆட்சியாளர்களிடம் கேளுங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி