சிறப்பாசிரியர்கள் தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2021

சிறப்பாசிரியர்கள் தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.

 


தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கான தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு கோருபவர்களுக்கு சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை நடத்துகிறது. மேலும் ஓவியம், தையல் போன்ற சிறப்பாசிரியர்களும் இதன் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 23இல் சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உடற்கல்வி பாடத்திற்கு அக்டோபர் 20, 2020, தையல் பாடத்திற்கு செப்டம்பர் 9, 2019 மற்றும் ஓவிய பாடத்திற்கு அக்டோபர் 18, 2019ம் ஆண்டு தேர்வு பட்டியல் வெளியானது.


இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு ஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஏற்கனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின் போது, ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத்தினர், தமிழ்வழி பயின்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னேற்பாடுகளை செய்ய திட்டமிட்டு உள்ளது. அதன்படி முன்னாள் ராணுவத்தினர், தமிழ்வழி பயின்றவர்கள் ஒதுக்கீடு பெற சான்றிதழை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஒதுக்கீடு கோரியவர்களின் பட்டியல் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் உள்ளவாறு பிப்ரவரி 10 இல் ஓவியம், 11ம் தேதி தையல் மற்றும் 12ம் தேதி உடற்கல்வி பாடத்திற்கும் சான்றிதழின் இரண்டு நகல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

3 comments:

  1. Want seniority basis PET appointment atleast 5% . 1999 th batch request

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. B.P.Ed tamilnatil engeum tamil medium illai athalal B.PEd thavirthu anaithu education qualification tamil vazhil irunthal konjam consider pannunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி