மறு உத்தரவு வரும்வரை தொடக்கக்கல்வி இயக்ககத்தின் பதவி உயர்வு கலந்தாய்வு ரத்து - DEE உத்தரவு செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2021

மறு உத்தரவு வரும்வரை தொடக்கக்கல்வி இயக்ககத்தின் பதவி உயர்வு கலந்தாய்வு ரத்து - DEE உத்தரவு செயல்முறைகள்.

 தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி ! மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 27.02.2021 மற்றும் 28.02.2021 ஆகிய நாட்களில் நடத்திட அறிவுரைகள் மற்றும் அட்டவணையுடன் வெளியிடப்பட்டு இருந்தது . சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் , வட்டாரக் கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு , நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைக்கால தடை ஆணை வழங்கப்பட்டுள்ளது . எனவே , நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு , பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு கலந்தாய்வு சார்பான அனைத்து நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இதே போன்று 26.02.2021 அன்று நடைபெறவிருந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் இடைக்கால தடையாணையின் காரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி